Ind vs Eng 2nd Test: அறிமுக வீரராக களமிறங்கும் பட்டிதார்! இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் - முதலில் பேட்டிங்
இரண்டு மாற்றங்களுடன் இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா மூன்று மாற்றங்களுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. அறிமுக வீரராக இந்திய அணியில் இளம் வீரர் ராஜத் பட்டிதார் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகபட்டினத்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் அனுபவ வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல் ரவீந்திர ஜடேஜா இல்லாத நிலையில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் ராஜத் பட்டிதார், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மூன்றாவது ஸ்பின்னராக களமிறங்குகிறார்.
இந்தியா முதல் போட்டியை போல் இரண்டாவது போட்டியிலும் 2 வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்களை கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளராக ஜேமி ஆண்டர்சன் மட்டுமே உள்ளார். பென் ஸ்டோக்ஸ் அவருக்கு பக்க பலமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ஆர்எம் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்தின் அஷ்வின், அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகேஷ் குமார், குல்தீப் யாதவ்
இங்கிலாந்து: ஜேக் க்ராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ்†, ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர், ஜேமி ஆண்டர்சன்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்