IND vs ENG 1st Test Preview: ஸ்பின் பவுலிங்கே ஜெயம்! ஆறு பேரில் ஜொலிக்கப்போவது யார் யார்? இந்தியா - இங்கிலாந்து மோதல்
கடந்த 2011இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் விராட் கோலி, சத்தேஷ்வர் புஜாரா அல்லது அஜிங்கியா ரஹானே ஆகியோர் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்குகிறது. அஸ்வின் 500, ஜடேஜா 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை இந்த தொடரை அடைவதற்கான வாய்ப்பாக உள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்த் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி இல்லாவிட்டாலும் ரோஹத் ஷர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என இந்திய பேட்டிங் வரிசை வலுவாகவே உள்ளது.
கடந்த 2011 நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, சத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே ஆகியோர் இல்லாமல் இந்தியா விளையாடியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் மேற்கூறிய வீரர்களில் யாராவது இருவர் கண்டிப்பாக அணியில் இடம்பிடித்து விடுவார்கள்
கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கும் நிலையிஸ், கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தெரிகிறது. அதே போல் ஸ்பின்னர்களில் அஸ்வின் - ஜடேஜா காம்போ களமிறங்கும் நிலையில், கூடுதல் ஸ்பின்னராக குல்தீப் யாதவுக்கு பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்படலாம். இவரால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால் இந்தியாவின் பேட்டிங் வரிசையை வலிமையாக்கி கொள்ளலாம்.
பவுலிங்கில் அஸ்வின் 490, ஜடேஜா 275 விக்கெட்டுகளை பெற்றுள்ளனர். இந்த தொடரில் இருவரும் 500, 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரம் முன்னரே இங்கிலாந்து தனது பிளெயிங் லெவனை அறிவித்துள்ளது. அதன்படி அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஆண்டர்சன் அணியில் இடம்பெறவில்லை. அதேபோல் ஜேக் லீச், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி என மூன்று ஸ்பின்னர்கள் இடம் பிடித்துள்ளனர். ஒரேயொரு வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் உடன் களமிறங்குகிறது.
போட்டி நடைபெறும் ஹைதராபாத் ஆடுகளம் விரிசல்களுடன் வறட்சியாக காணப்படுவதால் இங்கிலாந்து ஸ்பின்னர்களை நம்பி களமிறங்கி இருக்கலாம் என தெரிகிறது. ஜானி பேர்ஸ்டோ பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக பென் போக்ஸ் என்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு அணிகளுக்கும் முக்கியயமான தொடராக இது அமைந்துள்ளது. இதில் பெறும் வெற்றி தோல்வியை முடிவு வைத்து புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு முன்னேறலாம் என்பதால் இந்தியா, இங்கிலாந்து என இரு அணிகளும் பல்வேறு வியூகங்களுடனே களமிறங்கும் என தெரிகிறது.
அத்துடன் இரு அணிகளிலும் சேர்த்து 6 ஸ்பின்னர்கள் களமிறங்குவார்கள் என்பதால் ஜொலிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பிட்ச் நிலவரம்
இந்தியா மைதானங்கள் முதல் நாளில் இருந்தே பந்து நன்கு திரும்பும் விதமாகவும், ஸ்பின் பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் விதமாகவும் இருக்கும். ஹைதராபாத்திலும் இதுபோன்ற நிகழும் விதமாக பிட்சின் இரு பக்கங்களிலும் நல்ல லென்த் வீசக்கூடிய பகுதிகள் வறண்டும், விரிசலோடும் காணப்படுகிறது. எனவே சரியாக செயல்படும் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை அள்ளலாம்.
வானிலை நிலவரத்தை பொறுத்தவரை வறண்டு காணப்படும் எனவும், வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை 131 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய 31, இங்கிலாந்து 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
முதல் முறையாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் 1932இல் மோதிக்கொண்டன. கடைசியாக 2021-22 இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவுற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்