தமிழ் செய்திகள்  /  Cricket  /  Ind Vs Eng 1st Test: Jaiswal Fifty, Ashwin And Jadeja Due Spin Bowling Helps India To Dominate Against England On Day 1

IND vs ENG 1st Test: எந்த பயமும் இல்ல..!கில்லியாக பேட் செய்த ஜெஸ்ஸ்வால் - முதல் நாளில் இங்கிலாந்தை அமுக்கிய இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2024 05:36 PM IST

ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் பவுலிங்கில் அஸ்வின், ஜடேஜாவும் பின்னர் பேட்டிங்கில் யஷஸ்வி ஜெஸ்வால் ஆகியோரும் இங்கிலாந்து வீரர்களை டயர்டாக்க முதல் நாளில் மூன்று செஷன்களிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது

பந்தை லெக் சைடு அடித்து ரன் ஓடும் ஜெயஸ்வால்
பந்தை லெக் சைடு அடித்து ரன் ஓடும் ஜெயஸ்வால் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் அரைசதமடித்து 70 ரன்கள் அடித்தார். இந்தியா பவுலிங்கில் ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா. இந்திய ஓபனர்கள் ரோஹித் ஷர்மா - யஷஸ்வி ஜெயஸ்வால் டெஸ்ட் போட்டி போல் இல்லாமல் டி20 போல் பேட் செய்தார்கள். ஸ்பினுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பவுலர்கள் போல் மோஜிக்கை நிகழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் சிரமம் அடைந்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியான ரன் குவிப்பால் இங்கிலாந்து பவுலர்கள் திக்குமுக்காடினர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - ஜெயஸ்வால் ஜோடி 80 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஜெயஸ்வால் அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தார்.

மற்றொரு பேட்ஸ்மேனான ரோஹித் ஷர்மா 24 ரன்கள் எடுத்த நிலையில், ஜேக் லீச் பந்தில் அவுட்டானார். இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த சுப்மன் கில் நிதானத்தை கடைப்பிடித்தார். ஆனால் ஜெயஸ்வால் விடாமல் அதிரடியை தொடர்ந்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர் முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் இங்கிலாந்தை விட இந்தியா 127 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score stay connected with HT Tamil