IND vs ENG 1st Test: சுழல் ஜாலம் நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா..!திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆல்அவுட்
IND vs ENG 1st Test Innings Break: முதல் நாளிலேயே பந்து நன்கு திரும்பும் விதமாக இருந்த ஹைதராபாத் ஆடுகளத்தை ஸ்பின்னர்கள் அஸ்வின் - ஜடேஜா ஜோடி நன்கு பயன்படுத்தி துல்லிய பவுலிங்கால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
இந்தியா சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்திய பவுலிங்கில் ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அக்ஷர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இங்கிலாந்து பேட்டிங்கில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 70 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் பேட்டிங்கில் பெரிய பங்களிப்பு அளிக்கவில்லை.
முதல் நாள் தேநீர் இடைவெளிக்கு பின் அடுத்த 20 நிமிடங்களில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை முடித்தது. ஹைதராபாத் ஆடுகளம் முதல் நாளிலேயே பந்து நன்கு திரும்பும் விதமாகவும், ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும் செயல்பட்டது. இதன் நன்கு பயன்படுத்தி கொண்ட அஸ்வின் - ஜடேஜா ஜோடி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று பேட் செய்ய விடாமல் துல்லியமாக பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்