IND vs AUS T20: சிக்ஸர் மழை, இடது கை பேட்டர்கள் ராஜ்ஜியம்! டாப் 3 பேர் அரைசதம் - ஆஸ்திரேலியாவுக்கு 236 ரன்கள் இலக்கு
IND vs AUS Second T20 Innings Break: ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு எதிராக இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழை பொழிந்து ராஜ்ஜியம் நடத்தினர். டாப் மூன்று பேட்ஸ்மேன்களின் அரைசதம், ரிங்கு சிங் தரமான பினிஷ் காரணமாக இந்தியா 235 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பேட் செய்து அரைசதமடித்துள்ளனர்.
பொறுப்பாக பேட் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணிக்கு அதிரடியான ஓபனிங் கொடுத்து பவர்ப்ளே முடிவதற்குள் அரைசதமடித்த ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து மிடில் ஓவர்களில் வானவேடிக்கை நிகழ்த்திய இஷான் கிஷன் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டார். 10 பந்துகளில் விரைவாக 19 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
கடைசி கட்டத்தில் மிரட்டலாக பேட் செய்த ரிங்கு சிங் சிறப்பான கேமியோ மூலம் பினிஷ் செய்தார். அவர் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர் தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் எல்லீஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்தார்கள். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் சீன் அபாட் 3 ஓவர்கள் வீசி 56 ரன்களை வாரி வழங்கினார்.
ஆஸ்திரேலியா இந்த போட்டியை வெல்ல வேண்டுமானால் 236 ரன்கள் என்ற சாதனை சேஸ் செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்