IND vs AUS T20: பேட்டிங்கில் அதிரடி, பவுலிங்கில் துல்லியம்! ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய இந்தியா இரண்டாவது வெற்றி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus T20: பேட்டிங்கில் அதிரடி, பவுலிங்கில் துல்லியம்! ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய இந்தியா இரண்டாவது வெற்றி

IND vs AUS T20: பேட்டிங்கில் அதிரடி, பவுலிங்கில் துல்லியம்! ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்திய இந்தியா இரண்டாவது வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 26, 2023 11:00 PM IST

பேட்டிங், பவுலிங் என இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது.

ஸ்டோய்னிஸ் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகேஷ் குமார்
ஸ்டோய்னிஸ் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகேஷ் குமார் (PTI)

இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்களும் அதிரடியாக பேட் செய்து அரைசதமடித்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 58, இஷான் கிஷன் 52, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்தனர்.

கடைசி கட்டத்தில் மிரட்டலாக பேட் செய்த ரிங்கு சிங், சிறப்பான கேமியோ மூலம் 9 பந்துகளில் 31 ரன்கள் அடித்து பினிஷ் செய்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

இதைத்தொடர்ந்து 236 ரன்கள் என்ற சாதனை சேஸிங்கை செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மிகப் பெரிய இலக்கை விரட்ட களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித் 19, மேத்யூ ஷார்ட் 19 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானர்கள்.

இவர்களை தொடர்ந்து பேட் செய்ய வந்த இங்கிலிஸ் 2, மேக்வெல் 12 என நடையைகட்ட 58 ரன்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.

இந்த நேரத்தில் பேட் செய்த ஸ்டோய்னிஸ் கொஞ்சம் அதிரடி காட்டினார். அவருடன் இணைந்து டிம் டேவிட்டும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் இணைந்து 81 ரன்கள் சேர்த்தனர். 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த டிம் டேவிட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்த ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோய்னிஸ் அவுட்டாகி வெளியேறினார்.

அவ்வுளவுதான் அடுத்து வந்த சீன் அபாட், எல்லீஸ், ஜாம்பா ஆகியோர் தலா ஒரு ரன் மட்டும் எடுத்து பெவிலியனுக்கு திரும்பினர். கடைசி வரை பேட் செய்த அணி கேப்டன் மேத்யூ வேட் 23 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.

இந்திய பவுலர்களில் பந்து வீசிய அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் என இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.