IND vs AUS Second T20: இரண்டு ஸ்டார் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா - டாஸ் வென்று பவுலிங் தேர்வு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus Second T20: இரண்டு ஸ்டார் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா - டாஸ் வென்று பவுலிங் தேர்வு

IND vs AUS Second T20: இரண்டு ஸ்டார் வீரர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா - டாஸ் வென்று பவுலிங் தேர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 26, 2023 07:00 PM IST

IND vs AUS Second T20 Toss: உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆடம் ஜாம்பா, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்கள். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு

இதையடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்திலுள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா களமிறங்குகிறது. ஆஸ்திரேலியா அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரன்டோர்ஃப் பதிலாக ஜாம்பா, ஹார்டிக்கு பதிலாக மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

"இன்றைய போட்டியில் ஆடுகளத்தை பொறுத்தவரை சீரற்ற நிலையில் காணப்பட்டாலும் பேட்டிங்குக்கு நன்கு உதவும் என கணிக்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு மேல் பனிப்பொலிவு அதிகமாக இருக்கும் எனவும், இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்" என எதிர்பார்ப்பதாக பிட்சை ஆய்வு செய்த பின்னர் மேத்யூ ஹெடன், முரளி கார்த்திக் ஆகியோர் கூறியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் மைதானம் ஈரப்பத்துடனே காணப்படுகிறது. அவுட் பீல்ட் பகுதியில் ஈரம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் பீல்டர்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சீன் அபாட், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.