IND vs AUS Odi Preview: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல் - உலகக் கோப்பை முன் அணியை Fine Tune செய்ய வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus Odi Preview: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல் - உலகக் கோப்பை முன் அணியை Fine Tune செய்ய வாய்ப்பு

IND vs AUS Odi Preview: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல் - உலகக் கோப்பை முன் அணியை Fine Tune செய்ய வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 22, 2023 05:15 AM IST

உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடைசி நேரத்தில் உள்ள சிக்கல்கள், குறைகளை பைன் ட்யூன் செய்து கொள்வதற்கான வாய்ப்பாக மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடர் அமைகிறது. அதேபோல் அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கும் அஸ்வினும் தனது அனுபவத்தை வெளிகாட்ட வேண்டிய வாய்ப்பாக உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

இந்தியா சமீபத்தில் ஆசிய கோப்பை தொடர் வென்ற மகிழ்ச்சியுடனும், தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடரை இழந்த சோகத்துடன் இருக்கும் ஆஸ்திரேலியா அணியும் உலகக் கோப்பை தொடருக்கு முன் கடைசியாக தங்களது அணியில் இருக்கும் சிக்கல்கள், குறைகளை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த தொடர் அமைகிறது.

ஏனென்றால் உலகக் கோப்பை தொடரில் முறையே தங்களது முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை செய்யவுள்ளன. ஆனால் அதற்கு முன்னர் இரு அணிகளும் மூன்று போட்டிகளில் மோதவுள்ளன.

2016க்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய ஒரே அணியாக ஆஸ்திரேலியா உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவர் உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதிலாக அதிரடியாக பேட் செய்ய கூடியவரும், ஸ்பின் பவுலிங் செய்பவருமான மேத்யூ ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரதான வீரரான ஸ்டீவ் ஸ்மித், பேட் கம்மின்ஸ். மிட்செல் மார்ஷ், ஸ்டோய்னிஸ், வார்னர்,லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, ஹசில்வுட் ஆகியோர் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள் என தெரிகிறது.

இந்தியாவை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா, கோலி, பாண்ட்யா, குல்தீப் என பிரதான வீரர்களுக்கு முதல் இரண்டு போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையில் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான இதர வீரர்களுடன் இந்தியா களமிறங்குகிறது.

ஸ்பின்னர் அக்‌ஷர் படேல் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அவர் குணமாகாதபட்சத்தில் அந்த இடத்தை நிரப்புவதற்கு ஏற்ப ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். அவரது அனுபவம் இந்தியாவுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பேட்டிங்கிலும் சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு மற்றொரு வாய்ப்பாக இந்த போட்டி அமையும் என தெரிகிறது.

ஆடுகளம் எப்படி?

போட்டி நடைபெறும் மெஹாலி ஆடுகளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகள் நடைபெறவில்லை. ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சாதித்த நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் சாதித்துள்ளதால் பந்து வீச்சாளர்களுக்கும் கைகொடுக்கும் என நம்பலாம்.

இந்தியா - ஆஸ்திரேலியா கடைசியாக இங்கு மோதிய போட்டியில் 359 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் மொஹாலியில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டியில் இந்தியா ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1996ஆம் ஆண்டு அந்த வெற்றியானது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ராசியில்லாத இந்த மைதானத்தில் 27 ஆண்டுகள் கழித்து இந்தியா வெற்றியை குவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

போட்டியை எதில் பார்க்கலாம்?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.  போட்டியை கலர்ஸ் டிவி தமிழ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் பார்த்து ரசிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.