IND vs AUS 5th T20I Preview: சுந்தர், துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்தியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 5th T20i Preview: சுந்தர், துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்தியா

IND vs AUS 5th T20I Preview: சுந்தர், துபேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்தியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 03, 2023 06:30 AM IST

தொடரை கைப்பற்றிய நிலையில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய வீரர்களுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று ஐந்தாவது டி20 போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று ஐந்தாவது டி20 போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் தொடர்ச்சியாக 14வது டி20 தொடரை இந்தியா சொந்த மண்ணில் வெண்றுள்ளது. அத்துடன் இந்த போட்டிக்கு பின்னர் 2026 வரை ஆஸ்திரேலியா அடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதில்லை என கூறப்படுகிறது.

இந்த தொடரின் நான்கு போட்டிகளும் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாகவே அமைந்துள்ளது. பவுலர்களை காட்டிலும் பேட்ஸ்மேன்களே பெரிய அளவில் சாதித்துள்ளனர். அந்த வகையில் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் பெங்களூருவில் மற்றொரு ரன்வேட்டைக்கான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் இதுவரை 19 வீரர்களை வைத்து ஆஸ்திரேலியா விளையாடியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை, இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களாக ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளார்கள்.

ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி போட்டியான இன்று அவர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்திய மண்ணில் இதன் பின்னர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து விளையாடும் என்பதால் வெற்றியுடன் தொடரை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் என தெரிகிறது.

பிட்ச் நிலவரம்

இந்த தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை 2023 போட்டிகள் நடைபெற்ற மைதானத்தில், மீண்டும் போட்டி நடைபெறும் மைதானமாக பெங்களூரு உள்ளது. மிகவும் குறுகிய பவுண்டரி, தட்டையான ஆடுகளம் மற்றொரு பெரிய ஸ்கோருக்கான போட்டியாக இன்றைய அமையக்கூடும் என தெரிகிறது. சரியாக கணித்து பந்து வீசுவதன் மூலம் ராய்ப்பூர் போல் இங்கும் ஸ்பின்னர்கள் சாதிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொலிவு பெரிய பங்கு வகிக்காது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய வெற்றி பெற்றதன் மூலம் தொடரை வென்றதோடு, டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணி என்கிற பாகிஸ்தானின் சாதனையை முறியடித்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியிலும் வேறு சாதனைகளை இந்திய வீரர்கள் நிகழ்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.