IND vs AUS 4th T20I: ஓராண்டுக்கு பிறகு விளையாடும் சஹார்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 4th T20i: ஓராண்டுக்கு பிறகு விளையாடும் சஹார்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்

IND vs AUS 4th T20I: ஓராண்டுக்கு பிறகு விளையாடும் சஹார்! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 01, 2023 08:27 PM IST

புதிய அணியுடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ரிச்சர்ட்சனுக்கு பதிலாக கிறிஸ் க்ரீன், மெக்தெர்மோட், துவர்ஷுயிஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு (AP)

ஆஸ்திரேலியா அணியில் ஆல்ரவுண்டர்கள் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் க்ரீன், மெக்தெர்மோட், துவர்ஷுயிஸ். இவர்களில் மெக்தெர்மோட், துவர்ஷுயிஸ் ஆகியோர் இந்திய மண்ணில் முதல் முறையாக களமிறங்குகிறார்கள்.

இந்திய அணியிலும் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த போட்டிகளில் மோசமாக செயல்பட்ட பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக தீபக் சாஹர், முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். திலக் வர்மாவுக்கு பதிலாக ஜித்தேஷ் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

டாப் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷன் இன்று இடம்பெறாத நிலையில் ஜித்தேஷ் ஷர்மா விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளார்.

இதுவரை நடைபெற்று முடிந்திருக்கும் 3 போட்டிகளில் இந்தியா 2, ஆஸ்திரேலியா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கும் நிலையில், பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக அமைந்துள்ளது.

இன்றைய போட்டி நடைபெறும் ராய்ப்பூர் மைதானத்தில் முதலாவது சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியாவில் மிக நீளமான பவுண்டரிகளை கொண்ட மைதானமாக ராய்ப்பூர் உள்ளது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்‌ஷர் படேல், தீபக் சாஹர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார்

ஆஸ்திரேலியா: ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட், பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.