IND vs AUS 4th T20 Preview: பெரிய பவுண்டரிகளை கொண்ட மைதானம்! தொடரை வென்று சாதிக்குமா இந்தியா?
முக்கிய வீரர்கள் அனைவரையும் நீக்கிவிட்டு முற்றிலும் புதிய அணியாக ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு குறைபாடாக இருந்து வரும் நிலையில், அதை சரி செய்யும் விதமாக தீபக சஹார் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் மேக்ஸ்வெல் அதிரடி சதத்தால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, தொடரை இழக்காமல் உயிர்ப்புடன் வைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இன்றைய போட்டியில் உலகக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற எந்த வீரரும் இல்லாமல் முற்றிலும் புதிய அணியாக ஆஸ்திரேலியா களமிறங்கவுள்ளது. தொடரின் மத்தியில் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, ஸ்மித், ஸ்டோய்னிஸ் உள்பட உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய வீரர்கள் தாய்நாட்டுக்கு அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், பென் மெக்டெர்மாட் கிறிஸ் கிரீன், பென் ட்வார்ஷுயிஸ் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளும் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு போட்டிகள் அந்த ரன்களை சேஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளன.
சுமார் ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா பெற்றிருக்கும் வெற்றியாக கடந்த போட்டி அமைந்துள்ளது. பனிப்பொலிவு பெரும் பங்கு வகிக்கும் நிலையில், பவுலர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்து வருகிறார்கள். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் தீபக் சஹார் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம். அதேபோல் ஆல்ரவுண்டர்களில் வாஷிங்டன் சுந்தர் களம் இறக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர்களில் சிறப்பாக ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதிதாக சேர்க்கப்பட்ட மாற்று வீரர்கள் களமிறக்க படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் நிலவரம்
போட்டி நடைபெறும் ராய்ப்பூர் ஷாகித் வீர் நாரயண் சிங் மைதானம் இந்தியாவின் 50வது சர்வதேச மைதானமாக இருப்பதுடன், இங்கு நடக்க இருக்கும் இரண்டாவது சர்வதேச போட்டியாக உள்ளது. மிகவும் நீண்ட பவுண்டரிகளை கொண்ட இந்திய மைதானமாக இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி இங்கு நடைபெற்றும் லோ ஸ்கோர் ஆட்டமான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கு நடைபெறும் முதல் டி20 போட்டியாக இன்றைய போட்டி அமைகிறது.
இந்த தொடரில் நடைபெற்ற மற்ற மைதானங்களை போல் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் எனவும் இரவு நேரத்தின் பிற்பகுதியில் பனிப்பொலிவு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம். ஆஸ்திரேலியா வென்றால் சமநிலை அடைவதுடன், அடுத்த போட்டி பரபரப்பு மிக்கதாக அமையக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்