IND vs AUS 1st T20: உலகக் கோப்பை பைனலில் விழுந்த அடி!தக்க பதிலடி கொடுத்த சூர்யா - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
உலகக் கோப்பை பைனலில் மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்குள்ளான சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேவியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அதிரடி காட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார். கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கடைசி பந்தில் சிக்ஸருடன் பினிஷ் செய்தார் ரிங்கு சிங்
உலகக் கோப்பை 2023 தொடர் முடிந்திருக்கும் நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ஒய்எஸ் ராஜசேகரரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.
இரண்டு அணிகளிலும் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியா அணிக்கு மேத்யூ வேட் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டனர்.
இதையடுத்து டாஸ் வென்று இந்தியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலீஸ் அதிரடியாக பேட் செய்து 110 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 52 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா, பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 209 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், கடைசி பந்தில் 1 ரன் தேவை என்று இருந்தது. அப்போது களத்தில் இருந்து ரிங்கு சிங் சிக்ஸரை பறக்கவிட்டு பினிஷ் செய்தார். ஆனால் அது நோபாலாக அமைந்ததால் சிக்ஸர் கணக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
ஆஸ்திரேலியா பவுலர்களில் சங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சீன் அபாட், ஷார்ட், பெக்ரன்ட்ராப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல், ஆட்டத்தின் முதல் ஓவரில் நான்ஸ்டிரைக்கர் எண்டில் இருந்து ரன் எடுக்க முயற்சித்து டைமண்ட் டக்அவுட் ஆனார்.
மற்றொரு ஒபனிங் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் அதிரடி தொடக்கத்தை தந்து 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் பின்னர் இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தனர்.
இஷான் கிஷன் அரைசதமடித்து 39 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் அடித்து உலகக் கோப்பை பைனில் வெளிப்படுத்திய பேட்டிங் சொதப்பல் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.
கடைசி கட்டத்தில் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்து பினிஷ் செய்த ரிங்கு சிங், 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்