IND vs AFG 3rd T20I: மூன்று மாற்றங்கள்! சாம்சன் பெயரை சொன்னவுடன் எழுந்த சத்தம் - இந்தியா முதல் பேட்டிங்
இந்திய அணியில் இன்றைய போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்குகிறார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பெங்களுருவிலுள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
"வித்தியாசமான முயற்சிகளை செய்ய வேண்டும். எனவே புதிய வீரர்களை களமிறங்குகிறார்கள்" என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்று 2-0 என கணக்கில் முன்னிலை பெற்று,
ஏற்கனவே தொடரை வென்றிருக்கும் இந்தியா, முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடாமல் பெஞ்சில் இருக்கும் வீரர்கள் மூன்று பேருக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி அக்ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் ஷர்மா ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான், முதலில் பவுலிங் செய்ய விரும்பவதாக தெரிவித்த நிலையில், அவர் விரும்பியவாறு முதலில் அணி செய்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என வெற்றி பெற்று முன்னிலை வகிப்பதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் ரோஹித் ஷர்மா முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட்டானார்.
இதையடுத்து அவர் இன்றைய போட்டியில் ரன் கணக்கை தொடங்குவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் பெங்களுரு ஆடுகளம், “பிட்சில் புற்களை காட்டிலும் விரிசல்கள் அதிகமாக கணப்படுவதால், ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவலாம் எனவும், வழக்கம்போல் பேட்ஸ்மேன்களும் இங்கு ஜொலிப்பார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்:
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), குலாப்தின் நயிப், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரன், கரிம் ஜனத், ஷராபுதின் அஸ்ரப், பரீத் அகமது, குவாஸ் அகமது, முகமது சலீம்
டாபிக்ஸ்