IND vs AFG 3rd T20I Super Over: இரண்டு சூப்பர் ஓவர்! பயத்தை காட்டிய ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா - நடந்தது என்ன?
IND vs AFG 3rd T20I Super Over: இரண்டு சூப்பர் ஓவர்கள், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 3 விக்கெட்டுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
பரபரப்பாக சென்ற இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 போட்டி, ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் குலாத்தின் நயிப் அதிரடியால் டையில் முடிந்தது.
இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் விதமாக சூப்பர் ஓவர் நடந்தது. இதில் முதலில் ஆப்கானிஸ்தான் பேட் செய்தது. பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்த குலாப்தின் நயிப், ரஹ்மனுல்லா குர்பாஸ் பேட்ஸ்மேன்களாக களமறங்கினார்கள். இந்தியா பவுலர்களில் முகேஷ் குமார் சூப்பர் ஓவரை வீசினார்.
இதைத்தொடர்ந்து முதல் பந்தில் முகேஷ் குமார் யார்க்கர் வீச, அதை லாங் ஆன் திசையில் அடித்தார் குலாப்தின். இரண்டாவது ரன் ஓடும் முயற்சியில், கோலியின் அற்புத த்ரோவால் ரன் அவுட்டனார்.
இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய முகமது நபி ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட குர்பாஸ் பவுண்டரி அடித்து, நான்காவது பந்தில் ஒரு ரன் அடித்தார்.
சூப்பர் ஓவரின் 5வது பந்தில் டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸரை பறக்கவிட்டார் ஸ்டிரைக்கில் இருந்த முகமது நபி. இதனால் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 என உயர்ந்தது. கடைசி பந்தை மிஸ் செய்த நபி, பைஸ் ஓடினார். அப்போது வக்கெட் கீப்பர் சாம்சன் வீசிய பந்து நபி காலில் பட்டு விலகி லாங் ஆன் திசையில் செல்ல கூடுதலாக 2 ரன்களை ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எடுத்தனர்.
சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் அடித்த நிலையில், 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. இந்திய இன்னிங்ஸில் ரோஹித் ஷர்மா, யஸஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினார். ஆப்கானிஸ்தானில் அஸ்மதுல்லா உமர்சாய் பவுலிங் செய்தார்.
சூப்பர் ஓவர் முதல் பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா லெக் பைஸில் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஜெய்ஸ்வால் பைன் லெக் திசையில் ஸ்கூப் ஷாட்டை அடித்தார். முதல் இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் மட்டும் கிடைத்த நிலையில், சூப்பர் ஓவரின் 3 மற்றும் 4வது பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டார் ரோஹித்.
பின் 5வது பந்தில் மறுபடியும் ஒரு ரன் அடிக்க, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தை விட்டு ரிட்டயர்ட் அவுட் முறையில் வெளியேறினார் ரோஹித் ஷர்மா. அவர் வெளியேறியதால் ரிங்கு சிங் ரன்னர் அப்பாக வந்தார். இருப்பினும் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் மட்டுமே அடிக்க இந்தியாவும் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டை ஆனது.
வெற்றியாளரை தீர்மானக்க இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த முறை முதலில் இந்தியா பேட் செய்தது. ரோஹித் ஷர்மா - ரிங்கு சிங் ்பேட்ஸ்மேன்கலாக கலமிறங்க, ஆப்கானிஸ்தான் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரீத் அகமது பவுலிங் செய்தார்.
முதல் பந்தை நன்கு பிக்கப் செய்து லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார் ரோஹித். இரண்டாவது பந்தையும் வேகமாக வீச த்ரேடு மேன் திசையில் பவுண்டரி கிடைத்தது. மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தை ரிங்கு சிங் பலமாக வீச டாட் ஆனது. விக்கெட் கீப்பர் ரஹ்மனுல்லா அவுட்டுக்காக ரிவியூ கேட்டார். அது அவுட் என கொடுக்கப்பட்டது. ரிங்கு சிங் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.
5வது பந்தை எதிர்கொள்ள வந்த சஞ்சு சாம்சன் பந்தை அடிக்க முயற்சித்து தவறவிட பைஸ் ஓட முயற்சிக்கப்பட்டது. அப்போது ஸ்டிக்கர் எண்ட் பக்கம் நோக்கி ஓடி வந்த ரோஹித் ஷர்மா ரன் அவுட்டானார்.
12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது நபி, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்தியாவுக்கு இரண்டாவது சூப்பர் ஓவரில் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் வீசினார்.
முதல் பந்தில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ரிங் சிஹ் வசம் சிக்கினார் முகமது நபி. இரண்டாவது பந்தில் கரீம் ஜனத் சிங்கிள் அடித்தார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட ரஹ்மனுல்லா குர்பாஸும், முகமது நபி போல் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் அடிக்க ட்ரை செய்து ரிங்கு சிங் வசம் சிக்கினார்.
இரண்டாவது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் 1 ரன்னில் இரண்டு விக்கெட்டுகளையும் இழக்க் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்