IND vs AFG 3rd T20I: வீறுகொண்ட எழுந்த ரோஹித்! கடைசி ஓவரில் சிக்ஸர் மழை - ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு-ind vs afg 3rd t20i rohit sharma century rinku singh finish helps india to post 212 runs against afghanistan - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Afg 3rd T20i: வீறுகொண்ட எழுந்த ரோஹித்! கடைசி ஓவரில் சிக்ஸர் மழை - ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு

IND vs AFG 3rd T20I: வீறுகொண்ட எழுந்த ரோஹித்! கடைசி ஓவரில் சிக்ஸர் மழை - ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2024 10:22 PM IST

IND vs AFG 3rd T20I Innings Break: பார்மில் இருக்கும் துபே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஞ்சு சாம்சனும் முதல் பந்திலேயே நடையை கட்டினார். முதல் இரண்டு போட்டியில் சொதப்பிய ரோஹித் வீறுகொண்டு எழுந்த நிலையில், கோலி இன்று டக்அவுட்டானார்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரோஹித் ஷர்மா
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரோஹித் ஷர்மா (AP)

இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இரண்டு போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றிய ரோஹித் ஷர்மா இன்று வீறுகொண்டு எழுந்தார். முதலில் பொறுமையாக பேட் செய்த அவர் பின்னர் கியரை மாற்றி அதிரடிக்கு மாறினார். அவர் 121 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பந்தை பவுண்டரி, சிக்ஸர்கள் என விளாசிய ரோஹித் ஷர்மா 64 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இது டி20 போட்டியில் அவர் அடித்திருக்கும் ஐந்தாவது சதமாகவும், டி20 போட்டிகளில் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்துள்ளது. தனது இன்னிங்ஸில் 69 பந்துகளில் 121 ரன்கள் எடுத்திருப்பதோடு, 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ரோஹித்துக்கு அடுத்தபடியாக ரிங்கு சிங் ரன்கள் எடுத்தார். ரோஹித்துடன் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்த இவர், 36 பந்துகளில் அரைசதமடித்தார். ரோஹித் - ரிங்கு சிங் ஆகிய இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் சேர்த்தனர்.

முன்னதாக, இந்தியா 22 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ரோஹித் ஷர்மா - ரிங்கு சிங் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். அத்துடன் தங்களது அதிரடியான பேட்டிங்கால் ஆப்கானிஸ்தானுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தனர்.

கடைசி 5 ஓவரில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் 20வது ஓவரில் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 36 ரன்கள் அடிக்கப்பட்டது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி அவரை அவுட்டாகாமல் இருந்தார். இவர் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அடித்தார்.

ஆப்கானிஸ்தான் பவுலர்களில் பரீத் அகமத் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்மதுல்லா உமர்சாய் ஒரு விக்கெட்டை எடுத்தார். மற்ற பவுலர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.