IND vs AFG 2nd T20I: கம்பேக் தரும் கோலி! ஆப்கானிஸ்தான் வீரர்களின் ஸ்கெட்ச் - இன்று இரண்டாவது டி20 போட்டி
இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் சிறியதாகவும், பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருக்கும் இந்தூர் மைதானத்தில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது. 14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்தார் ரோஹித் ஷர்மா. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், ஆட்டத்தின் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
இதையடுத்து இந்த தொடரில் விராட் கோலியும், ரோஹித்தை போல் 14 மாதங்களுக்கு பிறகு கம்பேக் கொடுப்பதாக இருந்த நிலையில் முதல் போட்டியை சொந்த காரணங்களுக்காக மிஸ் செய்தார்.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் கோலி களமிறங்குகிறார். கோலியின் வருகையால் அவரது இடத்தில் பேட் செய்த திலக் வர்மா நீக்கப்படலாம். மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது என தெரிகிறது. ரோஹித்தை போல் கோலியின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார். அதேசமயம் ரோஹித் போல் கோலி பேட்டிங்கில் சொதப்ப மாட்டார் எனவும் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் விராட் கோலி ஆடும் போட்டியாக இன்றை ஆட்டம் அமைகிறது.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்டு ரன்குவிப்பில் ஈடுபடும் கோலி, ஸ்பின்னர்களுக்கு எதிராக அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாகவே உள்ளது.
இந்த சூழ்நிலையில் கோலிக்கான ஸ்கெட்சாக மூன்று ஸ்பின்னர்களுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது. இது அவருக்கு சவாலான விஷயமாகவே அமையக்கூடும். அதேபோல் முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் போன ரோஹித் இன்றைய ஆட்டத்திில் தனது பாணியில் அதிரடியை கையிலெடுப்பார் என நம்பலாம்.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட முடியாமல் போனால் அவரது இடத்தை நிரப்புவதற்காக சேர்க்கப்பட்டிருக்கும் ஷிவம் துபே சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் இந்த பார்மை தொடர்ந்தால் அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல் போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம், இந்தியாவில் இருக்கும் சிறிய மைதானமாக இருப்பதுடன் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக அமைந்துள்ளது. ஸ்பின்னர்களுக்கு பவுலிங் எடுபட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவதென்பது கடினமான விஷயமாகவே பவுலர்களுக்கு இருக்கும்.
எனவே இன்றைய போட்டியில் இரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் நல்ல ரன் வேட்டை காத்திருக்கிறது எனலாம்.
பிட்ச் நிலவரம்
பேட்டிங், பவுலிங் என யாருக்கும் சாதகமில்லாமல் சமநிலையான ஆடுகளமாக இருக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே போல் விரைவான அவுட்பீல்டு, குறுகிய பவுண்டரி ரன்குவிப்புக்கு சாதகமாக அமையும் என கூறப்படுகிறது.
வானிலையை பொறுத்தவரை வறண்டு காணப்படும் எனவும், மாலை நேரத்தில் இதமான சூழ்நிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்போர்ஸ் 18, தமிழ் வர்ணனையுடன் கலர்ஸ் டிவியில் கண்டுகளிக்கலாம்.
அத்துடன், ஜியோ சினிமா செயலியில் நேரலை ஸ்டீரிமிங் ஆகும் எனவும், அதிலும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்