IND vs AFG 1st T20I: 14 மாதங்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா கம்பேக்! நிகழ்ந்த உடனடி மாற்றம் - இந்திய முதலில் பவுலிங்
IND vs AFG 1st T20I Toss: முழுமையாக ஓர் ஆண்டு, 14 மாதம் இடைவெளிக்கு பிறகு களமிறங்கியுள்ளார் ரோஹித் ஷர்மா. தொடர்ச்சியாக இந்தியா அணி 11 முறை டாஸில் பெற்ற தோல்வி பயணத்துக்கும் தனது கம்பேக்கில் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மெஹாலியில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படவில்லை. அதேபோல் சீனியர் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் விளையாடவில்லை.
"பிட்ச்சில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. இந்த மூன்று போட்டியில் பல்வேறு விஷயங்கள் கிடைக்கும் என நம்புகிறோம். டி20 உலகக் கோப்பை போட்டி எதிர்கொள்ள இருக்கும் தருணத்தில் அதிக டி20 போட்டி விளையாட அமையவில்லை.
கடந்த ஓர் ஆண்டாக நான் டி20 அணியில் இல்லை. ஆனாலும் ராகுல் டிராவிடம் அணியில் நடப்பது குறித்து கேட்டறிந்தும், புரிந்தும் கொண்டேன். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், ஜெயஸ்வால், குல்தீப் ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாடவில்லை" என்ற டாஸ் வென்ற பிறகு ரோஹித் ஷர்மா கூறினார்.
"நாங்களும் முதலில் பவுலிங் செய்யதான் விரும்பினோம். இருந்தாலும் பிரச்னை இல்லை. எங்களது திட்டத்தை பேட்டிங்கில் செயல்படுத்த முயற்சிப்போம். டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்த தொடர் நல்ல அனுபவத்தை பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுவோம்" என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் கூறினார்.
14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார் ரோஹித் ஷர்மா. தொடர்ச்சியாக 11 போட்டிகளில் டாஸில் தோல்வியுற்றது இந்திய அணி. இன்றைய போட்டியில் ரோஹித் வருகைக்கு பின் டாஸில் வென்றுள்ளது.
இன்றைய போட்டியில் களமிறங்கும் அணிகளின் விவரம்:
இந்தியா: ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்
ஆப்கானிஸ்தான்: ரஹ்மனுல்லா குர்பாஸ், இம்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மத் ஷா, அப்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரன், முகமது நபி, குலாப்தின் நயிப், கரிம் ஜனத், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்