IND vs AFG 1st T20I: அதிரடி காட்டிய முகமது நபி! இந்தியாவுக்கு 159 ரன்கள் இலக்கு
மிடில் ஓவர்களில் முகமது நபி கொஞ்சம் அதிரடியை காட்டினார். கடைசி நேரத்தில் நான்கு பவுண்டரிகளை அடித்து நஜிபுல்லா ஜத்ரன் நல்ல பினிஷிங்கை கொடுத்தார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மெஹாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான முகமது நபி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அஸ்மதுல்லா உமர்சாய் 29, கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 25, ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்கள் எடுத்தனர்.
இந்திய பவுலர்களில் முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷிவம் துபே ஒரு விக்கெட்டை எடுத்தார்.
முதல் விக்கெட்டுக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர்.
இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த அஸ்மதுல்லா உமர்சாய் நிதானமாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவருடன் இணைந்து முகமது நபியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைந்தார்.
இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய நஜ்புல்லா ஜத்ரன், 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளை விரட்டினார்.
இந்திய அணியில் பிரதான ஸ்பின்னராக இருந்த ரவி பிஷ்னோய் 3 ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கியதோடு விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்