IND vs AFG 1st T20: ஏமாற்றிய ரோஹித், வானவேடிக்கை காட்டிய ஷிவம் துபே! ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
கேப்டன் ரோஹித் ஷர்மா தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அணிக்கு தேவையான பங்களிப்பை தனது பேட் மூலம் வழங்கினார்கள். அதிலும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அதிரடியாக பேட் செய்து அரைசதமடித்ததுடன் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை தந்தார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மெஹாலியில் இன்று நடைபெற்றது வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். 14 மாதங்களுக்கு பிறகு அவர் இந்திய டி20 அணியில் கம்பேக் கொடுத்தார்.
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் முக்கிய பேட்ஸ்மேனான முகமது நபி கொஞ்சம் அதிரடி காட்டி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
இவருக்கு அடுத்தபடியாக அஸ்மதுல்லா உமர்சாய் 29, கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் 25, ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்கள் எடுத்தனர். இந்திய பவுலர்களில் முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 159 ரன்கள் சேஸ் செய்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட் செய்த நிலையில், 17.3 ஒவர் முடிவில் 15 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியின் டாப் ஸ்கோரராக ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அதிரடியாக பேட் செய்து 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டி20 போட்டிகளில் அவர் இரண்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய இன்னிங்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா ஆட்டத்தின் 2வது பந்திலேயே ரன்அவுட்டாகி ஏமாற்றினார். அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார்.
மற்றொரு ஓபனராந சுப்மன் கில், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 12 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்து அவுட்டானார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய திலக் வர்மாவும் தனது பங்குக்கு 26 ரன்கள் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.
நான்காவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ஷிவம் துபே - ஜித்தேஷ் ஷர்மா 45 ரன்கள் சேர்த்தனர். ஜித்தேஷ் ஷர்மா சிறப்பாக பேட் செய்து 31 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் தனது பங்களிப்பாக 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்