IND vs AFG 1st T20 Preview: காயத்தால் விலகிய ரஷித் கான் - மீண்டும் டி20 அணியில் ரோஹித் ஷர்மா! சாதிக்குமா இந்தியா?
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடராக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் அமைந்துள்ளது. இதன் பின்னர் ஐபிஎல் தொடரில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொடராக உள்ளது.

வலைப்பயிற்சியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா
இந்த ஆண்டில் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுகிறது. வரும் ஜூன் மாதத்தில் இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்தியா விளையாட இருக்கும் கடைசி டி20 தொடராக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த தொடர் அமைந்துள்ளது. இதன் பின்னர் இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று, நேரடியாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள்.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பின்னரே 9 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான டி20 தொடராக இந்த போட்டி அமைகிறது.
