IND vs AUS 3rd T20 இந்தியா உத்தேச பிளேயிங் லெவன்
இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் வரவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் சந்தித்து வருகிறது.
இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் வென்ற இந்தியா, 3வது போட்டியில் தோல்வியைத் தழுவியது. எனினும், 4வது போட்டியில் வென்றது. அத்துடன், தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.
இன்று இந்திய அணியின் பிளேயிங் லெவன் அப்படியே இருக்கலாம் அல்லது மாற்றமும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இருப்பினும், ஷிவம் துபே போன்ற ஒரு ஆட்டக்காரர், இன்னும் இந்தத் தொடரில் களமிறக்கப்படவில்லை, மிடில் அல்லது லோயர் மிடில் ஆர்டரில் தனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை அவர் பெறலாம். சையத் முஷ்டாக் அலி கோப்பையில் துபே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார், அங்கு அவர் மும்பைக்காக 7 இன்னிங்ஸ்களில் 190 ரன்கள் குவித்தார். அதே நிலையில் இந்தியாவுக்கு முக்கிய காரணமாக இருந்த ரிங்கு சிங்கிற்கு பதிலாக அவர் லெவன் அணியில் இடம்பிடிக்க முடியும் என எதிர்பார்க்கலாம்.
அதோடு வாஷிங்டன் சுந்தரும் பெஞ்ச்சில் உள்ளார். அக்சர் படேல் ரவி பிஷ்னோய்க்கு சிறிது ஓய்வு அளிக்கும் வகையில் சுழல் துறையில் வாஷிங்டன் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஓபனிங்கிலும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தை நிரப்பும் தொடக்க ஜோடியாக இருக்கலாம்.
வெறும் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ஜிதேஷ் ஷர்மா, டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால், இன்றைய ஆட்டத்தில் மேலும் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது.
ஏறக்குறைய ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய தீபக் சாஹர், அவேஷ் கானுடன் இணைந்து பந்துவீச்சை தாக்குதலை தொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.
4வது டி20இல் 2 விக்கெட்டுகளை எடுத்தார் தீபக். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் மிரட்டுவார்.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் XI:
தொடக்க ஆட்டக்காரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட்
டாப் மற்றும் மிடில் ஆர்டர்: ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்)
பவர் ஹிட்டர்: ஷிவம் துபே
ஆல்-ரவுண்டர்: அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்
வேகப்பந்து வீச்சாளர்கள்: தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார்