தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  T20 World Cup 2024 Schedule: 20 அணிகள், நியூயார்க்கில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

T20 World Cup 2024 Schedule: 20 அணிகள், நியூயார்க்கில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி! டி20 உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 08:04 PM IST

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பிடித்துள்ளன.

டி20 உலகக் கோப்பை (கோப்புப்படம்)
டி20 உலகக் கோப்பை (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக 20 அணிகள் பங்கேற்கின்றனர். நான்கு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் இடம்பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது குரூப்களில் உள்ள அணிகளுக்கு எதிராக மோதிக்கொள்ளும். இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி சூப்பர் சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு அணிகளுக்கு இடையே மோதல் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதையடுத்து டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் ஜூன் 29ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடைபெறும் எனவும், ஜூன் 1 முதல் 18 வரை குரூப் பிரிவு போட்டிகளும், ஜூன் 19 முதல் 24 வரை சூப்பர் 8 சுற்று போட்டிகளும் நடைபெறவுள்ளன.

அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 தேதிகளிலும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளும் அவர்கள் விளையாடும் குரூப்களின் விவரமும்:

குரூப் ஏ - இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் பி - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூபி சி - நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா

குரூப் டி - தென் ஆப்பரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால்

இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை ஜூன் 5ஆம் தேதி எதிர்கொள்கிறது. இரண்டாவது போட்டி உலகமே எதிர்பார்க்கும் போட்டியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜூன் 9ஆம் தேதி நடைபெறகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக ஜூன் 12ஆம் தேதியும், கனடாவுக்கு எதிராக ஜூன் 15ஆம் தேதியும் விளையாடுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகளில், கனடாவுக்கு எதிரான போட்டி ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. இதர போட்டிகள் அனைத்தும் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024