HT Cricket Special: தென் ஆப்பரிக்கா மண்ணில் இந்தியாவின் முதல் போட்டி - டிவி அம்பயரால் அவுட் தரப்பட்ட முதல் பேட்ஸ்மேன்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: தென் ஆப்பரிக்கா மண்ணில் இந்தியாவின் முதல் போட்டி - டிவி அம்பயரால் அவுட் தரப்பட்ட முதல் பேட்ஸ்மேன்!

HT Cricket Special: தென் ஆப்பரிக்கா மண்ணில் இந்தியாவின் முதல் போட்டி - டிவி அம்பயரால் அவுட் தரப்பட்ட முதல் பேட்ஸ்மேன்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 07, 2023 06:15 AM IST

ஐசிசி தடைக்கு தளர்வுக்கு பின் முதல் ஒரு நாள் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாடிய தென் ஆப்பரிக்கா வெற்றியுடன் கம்பேக் கொடுத்தது.

தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில் இந்திய கேப்டன் முகமது அசாருதின் (இடது), தென் ஆப்பரிக்கா கேப்டன் கெப்லர் வெசல்ஸ் (வலது)
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் முகமது அசாருதின் (இடது), தென் ஆப்பரிக்கா கேப்டன் கெப்லர் வெசல்ஸ் (வலது) (espncricinfo)

1991இல் இந்த தடையிலிருந்து தளர்வு அளித்த ஐசிசி தென் ஆப்பரிக்கா அணியை சர்வதேச கிரிக்கெட் விளையாட அனுமதித்தது. இதன் பின்னர் அந்த அணி இந்தியாவுக்கு முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்து நவம்பர் 10 முதல் 14 வரை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடர் முடிந்து ஒர் ஆண்டுக்கு பின்னர் உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த பின்னர், 1992இல் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா 7 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

தென் ஆப்பரிக்காவுக்கு மேற்கொண்ட இந்தியாவின் முதல் சுற்றுப்பயணமாக அமைந்தது. சொல்லப்போனால் ஐசிசி தடைக்கு பின் டிசம்பர் 7ஆம் தேதியான இன்றுதான் தென் ஆப்பரிக்காவில் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்திய அணிக்கு முகமது அசாருதின் தலைமை வகித்தார்.

சச்சின் டென்டுல்கர், கபில் தேவி, அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இடம்பிடித்த போட்டியாக அமைந்தது. கேப்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தென் ஆப்பரிக்கா அணியில் இளம் வீரராக இருந்த ஹான்சி குரோனி வெறும் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவின் ஸ்கோரை 49.3 ஓவரில் 3 பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்து த்ரில் வெற்றி பெற்றது தென் ஆப்பரிக்கா.

கலர் ஜெர்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆப்பரிக்காவின் இரண்டாவது டாப் ஸ்கோரராக 43 ரன்கள் அடித்த அந்த அணி கேப்டன் கெப்லர் வெசல்ஸை, இந்திய இளம் வீரர் அஜய் ஜடேஜா ரன் அவுட்டாக்கினார்.

கெப்லர் வெசல்ஸ் விக்கெட் டிவி அம்பயரால் ரிவியூ செய்யப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் டிவி அம்பயரால் அவுட் கொடுக்கப்பட்டு களத்தை விட்டு வெளியேறிய பேட்ஸ்மேன் ஆனார் கெப்லர் வெசல்ஸ். தனது அற்புத பவுலிங்கால் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த ஹான்சி குரோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தென் ஆப்பரிக்கா மண்ணில் இந்தியா விளையாடிய முதல் போட்டி இன்று தான் நடைபெற்றது. இதே மாதத்தில் தற்போது தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்தியா 3 ஒரு நாள், 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.