HT Cricket Special: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் லேடி டென்டுல்கர்! ரன் மெஷினாக ஜொலித்த மிதாலி ராஜ்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் லேடி டென்டுல்கர்! ரன் மெஷினாக ஜொலித்த மிதாலி ராஜ்

HT Cricket Special: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் லேடி டென்டுல்கர்! ரன் மெஷினாக ஜொலித்த மிதாலி ராஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 03, 2023 06:00 AM IST

16 வயதில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான மிதாலி ராஜ் சதமடித்து அப்போதே தான் ஒரு ரன் மெஷின் என உலகுக்கு நிருபித்து காட்டினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ரன் மெஷின் மிதாலி ராஜ் பிறந்தநாள்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், ரன் மெஷின் மிதாலி ராஜ் பிறந்தநாள்

மிதாலி ராஜ் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்கும் நிலையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிறந்தார். பின்னர் ஹைதராபாத்துக்கு அவரது குடும்பம் குடியேறிய நிலையில் அங்கு தான் கிரிக்கெட் விளையாட்டை விளையாட தொடங்கினார்.

பத்து வயதில் இருந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் இருந்து மிதாலி ராஜ் கிரிக்கெட் பயணம் தொடங்கியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் ஏர் இந்தியா அணிக்காக விளையாடிய இவர், பின்னர் ரயில்வேஸ் அணிக்கு மாறினார். தொடர்ந்து மிதாலி ராஜ் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் சர்வதேச போட்டிகளுக்கான வாய்ப்பு கதவுகளை திறந்தது. 1999ஆம் ஆண்டில் முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். அயர்லாந்துக்கு எதிராக தனது அறிமுகபோட்டியிலேயே சதமடித்த மிதாலி ராஜ், 114 ரன்கள் எடுத்து அவுட்டாகம் இருந்ததுடன், தான் ஒரு ரன் மெஷின் என அப்போதே நிருபித்தார்.

இதைத்தொடர்ந்து 2002இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ், அந்த தொடரில் 214 ரன்கள் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டன் 209 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். இதை மிதாலி ராஜ் தனது 19வது வயதிலேயே செய்தது மற்றொரு பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது.

இந்திய மகளிர் இளம் கேப்டனாக நியமிக்கப்பட்ட மிதாலி ராஜ், 2005 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். 2006ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை தொடரை ஆகியவற்றை இவரது கேப்டன்சியில் இந்தியா வென்றது.

மிகவும் திறன் மிக்க பேட்டராக ஜொலித்த மிதாலி ராஜ், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் பேட்டராகவும், நங்கூரமிட்டு ஆடும் வீராங்கனையாகவும் இருந்து வந்ததுடன் ரன் வேட்டையிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்திய அணியை உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு முறை பைனல் வரை அழைத்து சென்ற கேப்டனாக இருந்து வருகிறார் மிதாலி ராஜ். 2019இல் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த இவர், 2022இல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களை கடந்த பேட்டர், தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்தவர், அதிக அரைசதங்கள் அடித்தவர், சர்வதேச டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்டர் என்ற பெருமைக்கு உரியவராக மிதாலி ராஜ் உள்ளார்.

155 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட இவர், அதிக போட்டிகள் கேப்டன்சி செய்த வீராங்கனை, தொடர்ச்சியாக 74 இன்னிங்ஸ் டக் அவுட் ஆகாதவர், மகளிர் கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள், 50 விக்கெட்டுகள் எடுக்க காரணமானவர் என பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் அதிக ரன் அடித்த வீராங்கனையாகவும் உள்ளார்.

2021இல் சார்லெட் எட்வர்ட்ஸின் 10,273 ரன்கள் என்ற சாதனையை முறியடித்ததன் மூலம் அவர் இதை செய்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டில் லேடி டென்டுல்கராகவும், ரன் மெஷினாவும் இருந்து வந்த மிதாலி ராஜுக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.