PBKS vs RR Result: கடைசி வரை போராடிய பஞ்சாப் பவுலர்கள்! சிக்ஸருடன் பினிஷ் செய்த ராயல்ஸ் பேட்ஸ்மேன் ஹெட்மேயர்
ஆரம்பத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தபோதிலும் கம்பேக் கொடுத்த பஞ்சாப் பவுலர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர். இருப்பினும் ஒரு பந்து மீதமிருக்க ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியை பெற்றது.

ஐபிஎல் 2024 சீசனின் 27வது போட்டி பஞ்சாப் கிங்ல் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் பஞ்சாப் கிங்ஸ் 8வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடி 5 போட்டிகளில், ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும் இருந்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் லேசான காயம் காரணமாக ஷிகர் தவான் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அதர்வ தைடே சேர்க்கப்பட்டார். அத்துடன் தவான் இல்லாத நிலையில், ஆல்ரவுண்டர் சாம் கரன் கேப்டனாக செயல்பட்டார். சிகந்தர் ராசாவுக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் சேர்க்கப்பட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் லேசான காயம் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு பதிலாக ரோவ்மன் பவல், தனுஷ் கோட்யான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இளம் வீரரான தனுஷ் கோட்யான் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறகினார்