SRH vs RR Qualifier 2: கிளாசன் அதிரடி! அஸ்வின், சஹால் ஓவர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srh Vs Rr Qualifier 2: கிளாசன் அதிரடி! அஸ்வின், சஹால் ஓவர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்

SRH vs RR Qualifier 2: கிளாசன் அதிரடி! அஸ்வின், சஹால் ஓவர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 24, 2024 09:49 PM IST

SRH vs RR Qualifier 2 ஸ்பின்னர்களின் கோட்டையான சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்பின்னர்கள் அஸ்வின், சஹால் ஆகியோரின் ஓவர்களை சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர். பனிபொலிவு தாக்கம் இருக்கும் என கூறப்படும் நிலையில், கிளாசன் அதிரடியால் சன் ரைசர்ஸ் 175 ரன்கள் குவித்துள்ளது.

அஸ்வின், சஹால் ஓவர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள்
அஸ்வின், சஹால் ஓவர்களை வெளுத்து வாங்கிய சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் (PTI)

இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஏய்டன் மார்க்ரம், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் 175 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 50, ராகுல் த்ரிபாதி 37, ட்ராவிஸ் ஹெட் 34 ஆகியோர் எடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கில் ட்ரெண்ட் போல்ட, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திர சஹால் ஆகியோர் விக்கெட்டுகளை எதுவும் வீழ்த்தவில்லை.

அபிஷேக் ஷர்மா ஏமாற்றம்

நல்ல பார்மில் இருந்து வரும் அபிஷேக் ஷர்மா சிக்ஸர், பவுண்டரி என இன்னிங்ஸை தொடங்கியபோதிலும் 12 ரன்னில் முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை போல் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஐடன் மார்க்ரம் ஒரு ரன்னில் வெளியேறினார்.

ஹெட் - திரிபாதி பார்ட்னர்ஷிப்

ஓபனர் ஹெட் - திரிபாதி இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்தனர். கடைசி இரண்டு போட்டியில் டக் அவுட்டான ஹெட் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடித்தார். ஆனால் திரிபாதி தொடக்கம் முதலே ரன் வேட்டையில் ஈடுபட்டார். 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்த திரிபாதி 15 பந்தில் 37 ரன்கள் அடித்து அவுட்டானார்.

மறுமுனையில் பொறுப்புடன் பேட் செய்து வந்த ஹெட் 28 பந்தில் 34 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

கிளாசன் அதிரடி

வழக்கம் போல் அதிரடியில் மிரட்டிய கிளாசன் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்கள் அனைவரின் ஓவர்களிலும் வெளுத்து வாங்கினார். 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த அவர் சந்தீப் ஷர்மா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவர் தனது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

கடைசி கட்டத்தில் அதிரடியான பினிஷ் கிடைக்காத நிலையில் சன் ரைசர்ஸ் 175 ரன்களை எடுத்துள்ளது.

விக்கெட்டுகள் வீழ்த்தாக அஸ்வின், சஹால்

ஸ்பின்னர்களின் கோட்டையாக இருந்து வரும் சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம், இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களுக்க நன்கு ஒத்துழைக்கும் விதமாக அமைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்த அனுபவ ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திர சஹால் கூட்டணி விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. அதேபோல் இருவரும் இணைந்து 8 ஓவரில் 77 ரன்கள் வாரி வழங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.