Obstructing the field: ‘வட போச்சே..’ பேட்டிங்கின்போது பந்தை கையாண்டதற்காக ஆட்டமிழந்த முதல் வங்கதேச வீரர்!
Mushfiqur Rahim: முஷ்ஃபிகுர் ரஹிம் நிதானமாக விளையாடினார். 3 ஃபோர்ஸ், 1 சிக்ஸர் விளாசி 83 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார்.
நியூசிலாந்து அணி வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் செய்து ஒரு நாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.
ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது. டெஸ்ட் தொடர் நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. முதல் டெஸ்டில் வங்கதேசம், 150 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது.
இரண்டாவது டெஸ்ட் டாக்காவில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் நியூசிலாந்து பந்துவீசி வருகிறது. வங்கதேச அணி சொந்த மண்ணில் 2வது டெஸ்டில் தடுமாறி வருகிறது.
ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வருகின்றனர்.
மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்களிலும், ஜாகிர் ஹசன் 8 ரன்களிலும், கேப்டன் ஷான்டோ 9 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
மோமினுல் ஹேக் 5 ரன்னில் வந்து வேகத்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முஷ்ஃபிகுர் ரஹிம் நிதானமாக விளையாடினார். 3 ஃபோர்ஸ், 1 சிக்ஸர் விளாசி 83 பந்துகளில் 35 ரன்களை எடுத்திருந்தார்.
41வது ஓவரை கைல் ஜேமிசன் வீசினார். அப்போது 4வது பந்தை எதிர்கொண்ட முஷ்ஃபிகுர் லேசாக ஸ்ட்ரோக் வைத்தார். உடனடியாக பந்து ஆடுகளத்தில் பட்டு மேலே எழும்பி ஸ்டம்ப் சற்று அருகில் எழும்பியது.
அப்போது சுதாரித்த முஷ்ஃபிகுர் ஸ்டம்ப்பில் பந்துபட்டு ஆட்டமிழக்கக் கூடாது என்ற காரணத்தால் சட்டென்று பந்தை கையால் பிடித்தார்.
இது சர்வதேச கிரிக்கெட் விதிமுறையின் படி தவறு ஆகும்.
உண்மையில், பந்து ஸ்டம்பை விட்டு சற்று தள்ளியே இருந்தது.
பேட்டால் வேண்டுமானால் பந்தை தடுக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கையால் பந்தை பேட்ஸ்மேன் தடுக்கக் கூடாது. இது ஃபீல்டிங்கை செய்யவிடாமல் தடுப்பது போன்றதாகும்.
இதையடுத்து உடனடியாக நியூசிலாந்து வீரர்கள் அவுட் கோரி நடுவரிடம் முறையிட்டனர். நடுவரும் முஷ்ஃபிகுர் ஆட்மிழந்ததாக அறிவித்தார். முஷ்பிகுர் ரஹீம் பந்தை கையாள்வதில் அவுட்டான முதல் வங்கதேச பேட்ஸ்மேன் ஆனார்.
முன்னதாக, உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை வீரர் மேத்யூஸ் பேட்டிங் செய்ய களத்திற்கு வருவதற்கு கால தாமதம் செய்ததாக ஆட்டமிழந்தது நினைவு கூரத்தக்கது. அந்த ஆட்டத்தில் வங்கதேசம் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்