Hardik Pandya: இந்திய அணிக்கு எப்போது திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா?-ஜெய் ஷா பகிர்ந்த தகவல்
அவருக்கு காயம் ஏற்பட்டதில் இருந்து, ஹர்திக் பாண்டியா ஐபிஎல் அல்லது மிக முக்கியமாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு திரும்புவாரா என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் டீம் இந்தியா சுற்றுப் பயணம் செய்துள்ளது, ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது அனைத்து ரசிகர்களின் மனதிலும் உள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் போது கணுக்காலில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு உலகக் கோப்பை தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை. பின்னர், ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை.
அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்திருந்தால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்தியிருப்பார். அவருக்கு காயம் ஏற்பட்டதில் இருந்து, டீம் இந்தியா ரசிகர்கள் ஐபிஎல் அல்லது 2024 டி20 உலகக் கோப்பைக்கு அவர் திரும்புவாரா என்று யோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை பகிர்ந்து கொண்டார், ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டி20 அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
"ஜனவரியில் நடைபெறும் ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா பொருத்தமாக இருப்பார்" என்று பிசிசிஐ செயலாளர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ஆறாவது பந்துவீச்சாளராக ஹர்திக்கின் முக்கிய பங்கு
ஹர்திக் பாண்டியா காயத்திற்குப் பிறகு 2023 உலகக் கோப்பையை விட்டு வெளியேறியதை தொடர்ந்து, டீம் இந்தியா சில சிக்கல்களை எதிர்கொண்டது. பாண்டியா உலகக் கோப்பைக்கான இந்தியாவின் துணைக் கேப்டனாக இருந்தார், மேலும் அவர் ஐபிஎல் 2021 மற்றும் 2022 இல் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வழிநடத்தினார் , உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் இருப்பு இந்தியாவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்திருக்குமா என்று ரசிகர்களால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆப்கானிஸ்தான் தொடரின் போது ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் டி20 தொடர் அதுவாகும். ரோஹித் ஷர்மா வெள்ளை பந்து வடிவத்தில் இருந்து இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா இந்தியாவை வழிநடத்துவதற்கான சிறந்த தேர்வுகளில் ஒருவராக திகழ்வார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவர் ஐசிசி உலகக் கோப்பை 2023 இன் பின்னடைவுக்குப் பிறகு இந்தியா விளையாடிய முதல் டி20 தொடரில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கில் இந்திய அணியை அற்புதமான வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
டாபிக்ஸ்