Hardik Pandya and Natasa Stankovic: 4 வருட உறவு முடிவு!அடிமேல் அடி - நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்டியா
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hardik Pandya And Natasa Stankovic: 4 வருட உறவு முடிவு!அடிமேல் அடி - நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்டியா

Hardik Pandya and Natasa Stankovic: 4 வருட உறவு முடிவு!அடிமேல் அடி - நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்டியா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 18, 2024 09:41 PM IST

நான்கு வருட உறவுக்கு பின்னர் இருவரும் பரஸ்பரம் பேசி பிரிவதாக முடிவு எடுத்திருப்பதாக, காதல் மனைவி நடாஷாவுடனான பிரிவு குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறிவித்துள்ளார்.

காதலை மனைவி நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்ட்யா
காதலை மனைவி நடாஷாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த பாண்ட்யா

ஐபிஎல் தொடர் முடிவுக்கு பின்னர் இருவருக்கும் இடையிலான உறவு குறித்தும், அவர்கள் பிரியபோவதாகவும் தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தற்போது அதை இந்த காதல் தம்பதிகள் உண்மையாக்கியுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா இன்ஸ்டா பதிவு

இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஆகியோர் எடுத்த முடிவு குறித்த பதிவை ஆல்ரவுண்டர் ஹர்திக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,  அந்த பதிவில், "நான்கு ஆண்டுகள் உறவுக்கு பிறகு நடாஷாவும், நானும் பரஸ்பரம் பிரிவது என முடிவு எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் எங்களிடம் இருந்த சிறப்பான விஷயங்களை அனைத்தும் பகிர்ந்து கொண்டோம். தற்போது இருவருக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறோம்.

நாங்கள் ஒன்றாக அனுபவித்து ஒரு குடும்பமாக வளர்ந்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை மற்றும் தோழமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு சந்தேகத்துக்கு இடமின்றி கடினமானதாக இருந்தது. எங்களுக்கு அகஸ்த்யா என்ற குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு நாங்கள் இருவரும் பெற்றோராக இருந்து வளர்ப்போம்.

அகஸ்தியா எங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதம், அவர் எங்கள் இருவரின் வாழ்க்கையின் மையமாக இருப்பார், மேலும் அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய பெற்றோராக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்

இந்த தருணத்தில் எங்களது முடிவுக்கு ஆதரவு அளித்து, கடினமாக மற்றும் உணர்ச்சி மிக்க இந்த நேரத்தில் எங்களது தனியுரிமைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஹர்திக்/நடாஷா"

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பாண்டியா - நடாஷா விவாகரத்து வதந்தி

கடந்த மே மாதம் பாண்டியா என்கிற தனது பெயரின் பிற்பகுதியை நடாஷா தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கினார். இதன் பிறகு இவர்கள் பிரிவதாக வதந்தி பரவியது. அத்துடன் இந்த ஜோடி தங்களது புகைப்படங்கள் எதுவும் பகிராமல் இருந்து வந்தது இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. 

மார்ச் 4ஆம் தேதி நடாஷாவின் பிறந்தநாளில், ஹர்திக் எந்த வாழ்த்து பதிவு பகிரவில்லை. அத்துடன் ஹர்திக்குடன் இருக்கும் புகைப்படங்களை நடாஷா இன்ஸ்டாவில் நீக்கியதுடன், குழந்தை அகஸ்தியா, ஹர்திக் ஆகியோர் இருக்கும் குடும்ப புகைப்படத்தை மட்டும் வைத்திருந்தார். 

வாய்திறக்காத ஹர்திக், நடாஷா

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டனாக நியமிக்கபட்ட நிலையில், அவரது தலைமையில் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதற்கு, ஹர்திக் மனைவி நடாஷாவும் தான் காரணம் என ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறினர். 

அந்த நேரத்தில் நடாஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், டிராபிக் குறியீடுகள் இடம்பிடித்திருக்க, " யாரோ ஒருவர் தெருவில் நிற்க போகிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா வாய்திறக்காமல் இருந்தார். எந்தெவாரு கருத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்காமல் இருந்தார். 

அதேபோல் மும்பையின் தனது ஆண் நண்பருடன் அவுட்டிங் வந்த நாடாஷாவிடம் விவாகரத்து வதந்து குறித்து கேட்டபோது, எந்த பதிலும் கூறாமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

ஹர்திக்குக்கு ராசியில்லாத நாள்

நடாஷாவுடனாந விவாகரத்து குறித்து ஹர்திக் பாண்டியா அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை சுற்றுப்பயணத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்ப்டடது. இதில் இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். 

பாண்டியாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்ட நிலையில், தற்போது மனைவியையும் அவர் இதே நாளில் பிரிந்துள்ளார். அதன்படி, அடிமேல் அடி என பாண்டியாவுக்கு ஜூலை 18, வியாழக்கிழமை ராசியில்லாத நாளாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.