தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Gulbadin Cheating Allegations: குல்புதீன் நயிப் செயல்! நேரம் வீணடிப்பு குறித்து ஐசிசி விதிகள் கூறுவது என்ன?

Gulbadin Cheating Allegations: குல்புதீன் நயிப் செயல்! நேரம் வீணடிப்பு குறித்து ஐசிசி விதிகள் கூறுவது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 26, 2024 12:30 PM IST

ஆப்கானிஸ்தான் வீரர் குல்புதீன் நயிப் காயம் ஏற்பட்டதாக கூறி நேரத்தை வீணடித்ததாக கூறப்படும் செயல் நிலை ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் நேரம் வீணடிப்பு நிலை 1 அல்லது 2 குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ரன்கள் வரை பெனால்டி கொடுக்க வாய்ப்பு இருந்தும் அதிலிருந்து ஆப்கானிஸ்தான் தப்பித்துள்ளது.

குல்புதீன் நயிப் செயல்! நேரம் வீணடிப்பு குறித்து ஐசிசி விதிகள் கூறுவது என்ன
குல்புதீன் நயிப் செயல்! நேரம் வீணடிப்பு குறித்து ஐசிசி விதிகள் கூறுவது என்ன

இதன் தொடர்ச்சி தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் தொடர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அப்செட் செய்த வளர்ந்து வரும் அணியான ஆப்கானிஸ்தான், அரையிறுதிக்கு போட்டிகான வாய்ப்பாக அமையும் வங்கதேசத்துக்கு எதிரான கட்டாய வெற்றி போட்டியையும் வென்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை புரிந்தது.

பரபரப்பான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

கிங்ஸ்டவுனில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் மூன்று முறைக்கு மேல் மழை குறுக்கீடு, பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், 115 ரன்களே எடுத்திருந்த ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை 105 ரன்களுக்கு ஆல்அவுட்டாக்கி த்ரில் வெற்றியை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் ஆட்டத்தின் 12வது லேசாக மழை பெய்ய தொடங்கிய நிலையில், ஸ்லீப் பீல்டிங்கில் இருந்த ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் குல்புதீன் நயிப் தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது போல் கீழே விழுந்தார்.

அப்போது மழையும் குறுக்கிட அடுத்த பந்து வீசாப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வங்கதேசம் டிஎல்எஸ் விதிப்படி 2 ரன்கள் குறைவாக இருந்தது.

பயிற்சியாளர் செய்கையை கவனித்து நேரத்தை கடத்திய நயிப்

நயிப் சரிந்து கீழே விழுவதற்கு முன்பாக லேசாக சாரல் மழை பெய்ய தொடங்கியபோது, டக்அவுட்டில் இருந்து ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட், ஆட்டத்தை மெதுவாக்குமாறு செய்கை காட்டினார். இதை கவனித்த பின்னர் காயம் ஏற்பட்டது போல் கீழே விழுந்து நேரத்தை கடத்தினார் குல்புதீன் நயிப்.

மழை குறுக்கீடுக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய போதிலும், இந்த சம்பவம் பற்றி தெளிவாக தெரிந்தது. அத்துடன் பயிற்சியாளர் செய்கைக்கு இணங்க நயிப் அப்படி நடந்து கொண்டதும் தெரியவந்தது.

மிக முக்கியமாக காயத்தால் தவிப்பது போல் செய்கை வெளிப்படுத்திய நயிப், போட்டி மீண்டும் தொடங்கியபோது களமிறங்கியதோடு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி ஆச்சர்யமூட்டினார். இவரது இந்த செயலால், சொந்த அணியை சேர்ந்த வீரர்கள் உள்பட பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். அத்துடன் அவரது செயலுக்கு சிலர் விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் நயிப்பின் செயலை ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

ரஷித் கான் விளக்கம்

இந்த போட்டி முடிந்த பின்னர் நயிப் அப்படி செய்தது குறித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறியதாவது, "அவருக்கு லேசாக தசைப்பிடிப்பு இருந்தது. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது, சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதை பற்றி பேசுவது முக்கியமில்லை. அந்த சம்பவம் ஆட்டத்தில் எந்தவொரு பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நாங்கள் மீண்டும் களத்துக்கு வந்து தொடர்ந்து விளையாடினோம்" என்றார்.

ஐசிசி விதிமுறை கூறுவது என்ன?

இதற்கிடையே காயமடைந்ததாக கூறி நயிப் நேரத்தை வீண் செய்ததாக கூறப்படும் நிலையில், ஐசிசி விளையாட்டு நிபந்தனைகளின் பிரிவு 41இன் படி, "நியாயமான மற்றும் நியாயமற்ற விளையாட்டின் ஒரே நீதிபதியாக நடுவர்கள் இருப்பார்கள். இந்த விளையாட்டு நிலைமைகளின் கீழ் வராத, வீரர்களின் எந்தவொரு நடவடிக்கையும் நியாயமற்றது என்று நடுவர் கருதினால், அவர் டெட் பந்தாக அழைக்கலாம். இந்த அழைப்பு தவறு செய்யாத பக்கத்துக்கு பாதகமாக இருக்காது என்பது தெளிவாகத் தெரிந்தால், மற்ற நடுவருக்கு விஷயத்தை தெரிவிக்க வேண்டும்.

இது அந்த அணியின் முதல் குற்றமாக இருந்தால், தவறு செய்த வீரரின் கேப்டனை அழைத்து முதல் மற்றும் இறுதி எச்சரிக்கையை நடுவர் வழங்குவார். இது அணியின் அனைத்து வீரர்களுக்கும் ஆட்டம் முடியும் வரை பொருந்தும். மேலும், தவறு செய்த வீரரின் கேப்டனை எச்சரிக்கவும், அவரது அணியின் எந்தவொரு வீரரும் மேற்கொண்டு இதுபோன்ற தவறை செய்தால் எதிரணிக்கு ஐந்து பெனால்டி ரன்கள் வழங்கப்படும்.

இந்த சூழ்நிலையில் குல்பாதின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டாலும், கள நடுவர்கள் ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து ரன்கள் பெனால்டி வழங்குவதன் மூலம் மட்டுமே தண்டித்திருக்க முடியும். ஆனால் அது ஆட்டத்தின் அந்த நேரத்தில் நடக்கவில்லை.

நேரத்தை வீணடிப்பதற்கான தண்டனை

போட்டிக்கான ஆடுகள நிலைமைகளின் பிரிவு 4.9, 'ஒரு அணி நேரத்தை வீணடித்தல்' தொடர்பானது.

"ஒரு ஓவரின் முன்னேற்றம் தேவையில்லாமல் மெதுவாக உள்ளது அல்லது வேறு எந்த வகையிலும் நேரத்தை வீணடிக்கிறது என்று நடுவர் கருதினால், பீல்டிங் அணியின் கேப்டன் அல்லது வேறு எந்த பீல்டராலும் ஏற்படுத்தினால் நடுவர் முதல் தருணத்தில் டெட் பால் என அழைத்து சமிக்ஞை செய்யலாம். மற்ற கள நடுவருக்கு என்ன நடந்தது என்பதை மற்ற தெரிவிக்க வேண்டும்.

பின்னர் நடுவர் பீல்டிங் அணியின் கேப்டனை எச்சரிக்க வேண்டும், இது முதல் மற்றும் இறுதி எச்சரிக்கை என்பதைக் குறிக்கிறது."

இதற்கிடையே, ஐசிசி நடத்தை விதிகளின் கீழ், குல்பாதின் நேரத்தை வீணடிக்கும் செயல், நிலை ஒன்று அல்லது நிலை இரண்டு குற்றமாக குறிப்பிடலாம்,

இதற்காக உச்ச அமைப்பு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கலாம் அல்லது இரண்டு இடைநீக்க புள்ளிகளைச் சேர்க்கலாம்.

களத்தில் உள்ள நடுவர்கள் இந்த சம்பவத்தை போட்டி நடுவரிடம் நேரத்தை வீணடிப்பதாக புகார் செய்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகிறது.

இந்தியாவுக்கு கிடைத்த 5 பொன்ல்டி ரன்கள்

முன்னதாக, லீக் சுற்றில் யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டியின் போது யுஎஸ்ஏ அணி, ஓவர்களுக்கு இடையே பந்து வீச மூன்று முறைக்கு மேல் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 5 ரன்கள் பெனால்டி வழங்கப்பட்டது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்