தமிழ் செய்திகள்  /  Cricket  /  Gujarat Titans Beat Sunrisers By 7 Wickets And Sealed Second Victory Of This Season

GT vs SRH Result: சாய் சுதர்சன், மில்லர் பொறுப்பான பேட்டிங்! சன் ரைசர்ஸை வீழ்த்திய குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 31, 2024 08:05 PM IST

பவுலிங், பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ், 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழ்நாடு வீர்ர சாய் சுதர்சன்
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் தமிழ்நாடு வீர்ர சாய் சுதர்சன் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் ரன் குவிப்பு

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது.

அதிகபட்சமாக அப்துல் சமாத் 29, அபிஷேக் ஷர்மா 29, ஹென்ரிச் கிளாசன் 24, ஷபாஸ் அகமது 22 ரன்கள் எடுத்துள்ளனர். சன் ரைசர்ஸ் அணியில் யாருமே அரைசதம் அடிக்காத நிலையில் இந்த ஸ்கோரை எடுத்தது.

கட்டுக்கோப்பாக பந்து வீசிய குஜராத் பவுலர்களில் அறிமுக வீரர் தர்ஷன் நல்கண்டே தவிர மற்ற அனைவரும் விக்கெட்டுகள் எடுத்தனர். மோகித் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் கடைசி ஓவரை அற்புதமாக பந்து வீசிய அவர் 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அஸ்மதுல்லா உமர்சாய், உமேஷ் யாதவ், ரஷித் கான், நூர் அகமது, ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் சேஸிங்

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இம்பேக்ட் வீரராக களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 45, டேவிட் வார்னர் 44 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சுப்மன் கில் 36 ரன்கள் எடுத்தார்.

அதிரடி தொடக்கம்

குஜராத் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார் ஓபனிங் பேட்ஸ்மேன் விருத்திமான சாஹா. 13 பந்துகளில் 25 ரன்கள் விரைவாக அடித்து, நல்ல தொடக்கத்தை தந்த பின்னர் அவுட்டானார்.

இவரை தொடர்ந்து மற்றொரு ஓபனரும், அணியின் கேப்டனுமான சுப்மன் கில் தன் பங்குக்கு 36 ரன்கள் அடித்து வெளியேறினார்.

சாய் சுதர்சன் - மில்லர் பார்ட்னர்ஷிப்

மூன்றாவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் - டேவிட் மில்லர் ஆகிய இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 64 ரன்கள் சேர்த்தனர்.

சாய் சுதர்சன் பொறுப்புடன் பேட் செய்து 45 ரன்கள் அடித்தார். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த டேவிட் மில்லர் 44 ரன்கள் எடுத்தார்.

குஜராத் டைட்ன்ஸ் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளது.

மூன்று போட்டிகள் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்தாலும், நல்ல ரன் ரேட் வைத்திருப்பதால் சன் ரைசர்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point