தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rr Vs Gt Result: கடைசி பந்தில் பவுண்டரி..! த்ரில் வெற்றியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றிக்கு End Card போட்ட குஜராத்

RR vs GT Result: கடைசி பந்தில் பவுண்டரி..! த்ரில் வெற்றியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றிக்கு End Card போட்ட குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 10, 2024 11:58 PM IST

கடைசி கட்டத்தில் ராகுல் திவாட்டியா, ஷாருக்கான், ரஷித் கான் வெளிப்படுத்திய சிறிய கேமியோ இன்னிங்ஸ் குஜராத் அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. அத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றி பயணமும் முடிவுக்கு வந்தது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டம் குஜராத் பேட்ஸ்மேன் ரஷித் கான்
பந்தை பவுண்டரிக்கு விரட்டம் குஜராத் பேட்ஸ்மேன் ரஷித் கான் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மேத்யூ வேட், பிஆர் ஷரத்துக்கு பதிலாக அபினவ் மனோகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் அந்த அணி 123 ரன்கள் எடுத்தது.

குஜராத் பவுலர்களில் சிறப்பாக பவுலிங் செய்த ஸ்பின்னர் ரஷித் கான் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் சேஸிங்

இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர் வெற்றி பயணத்துக்கு என்ட் கார்டு போட்டுள்ளது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட பந்த எதிர்கொண்ட ரஷித் கான், பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

குஜராத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 72, சாய் சுதர்சன் 35 ரன்கள் அடித்தனர். சிறப்பாக பினிஷ் செய்து அணிக்கு வெற்றியை தேடி தந்த ரஷித் கான் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் குல்தீப் சென் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஸ்பின்னர் சஹால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட்டை எடுத்தார். மற்றொரு ஸ்பின்னரான அஸ்வின் தொடர்ச்சியாக 4வது போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை.

நல்ல தொடக்கம்

197 என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்வதற்கு அடித்தளமாக குஜராத் டைட்ன்ஸ் ஓபனர்கள் சாய் சுதர்சன் - கேப்டன் சுப்மன் கில் நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் 8.2 ஓவரில் சேர்த்தனர். சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரை தொடர்ந்து வந்த மேத்யூ வேட் 4, அபினவ் மனோகர் 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினர். தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து வந்த கில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

பெரிதாக ஜொலிக்காவிட்டாலும் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று வரும் விஜய் சங்கர் இந்த ஆட்டத்தில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அவ்வப்போது பவுண்டரி அடித்து என ரன்குவிப்பில் ஈடுபட்ட கில்லும் 72 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

த்ரில் பினிஷ்

கடைசி கட்டத்தில் பேட் செய்த ராகுல் திவாட்டியா, ஷாருக்கான், ரஷித் கான் ஆகியோர் சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இம்பேக்ட் வீரராக பேட் செய்ய வந்த ஷாருக்கான 8 பந்துகளில் 14 ரன்கள் அடித்து அவுட்டானார். ராகுல் திவாட்டியா 11 பந்துகளில் 22 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 5வது பந்தில் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

கடைசி வரை நிலைத்து நின்று பேட் செய்த ரஷித் கான் 11 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 24 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

ராகுல் திவாட்டியா - ரஷித் கான் ஆகியோர் இணைந்து 14 பந்துகளில் 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் தான் குஜராத் வெற்றி பெற காரணமாக அமைந்தது.

அத்துடன் கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு பிறகு வெளியூர் மைதானத்தில் வெற்றி பெறும் அணியாக குஜராத் டைட்டன்ஸ் மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point