தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Gt Result: முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்! ஹாட்ரிக் தோல்வியுடன் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலையில் பஞ்சாப்

PBKS vs GT Result: முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்! ஹாட்ரிக் தோல்வியுடன் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலையில் பஞ்சாப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 11:23 PM IST

PBKS vs GT Result: அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை எடுத்து குஜராத்திடம் இருந்த ஆட்டத்தை தன் வசப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ். கடைசி கட்டத்திலவ் நங்கூரம் போல் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன் ராகுல் தெவாட்டியா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாட்டியா (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதல் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே குஜராத் டைட்டன்ஸ் பதிலடி கொடுக்க வேண்டிய போட்டியாக இது அமைந்திருந்தது.

இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. அதிலும் பஞ்சாப் கிங்ஸ் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தழுவியிருந்தது.

பஞ்சாப் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்ப்ரீத் பிரார் 29, சாம் கரன் 20 ரன்கள் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் பவுலர்களில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவருக்கு அடுத்தபடியாக மோகித் ஷர்மா, நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் சேஸிங்

143 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்ன்ஸ் 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக ராகுல் தெவாட்டியா 36, சுப்மன் கில் 35, சாய் சுதர்சன் 31 ரன்கள் அடித்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 3 லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாம் கரன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கட்டாய வெற்றியை நோக்கி பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்ன்ஸ் ஆகிய இரு அணிகளும் களமிறங்கின. இதில் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கில் - சாய் சுதர்சன் பொறுப்பான பேட்டிங்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஓபனரான விருத்திமான சாஹா 13 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் கில் - இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட சாய் சுதர்சன் இணைந்து பொறுப்புடன் பேட் செய்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில் 35 ரன்கள் எடுத்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒரு நாள் இன்னிங்ஸ் போல் விளையாடி வந்த சாய் சுதர்சன் 34 பந்துகளை எதிர்கொண்டு 31 ரன்கள் அடித்து கரன் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார். கில் - சாய் சுதர்சன் இணைந்து 41 ரன்கள் சேர்த்தனர்.

இவர்களை தொடர்ந்து பேட் செய்ய வந்த டேவிட் மில்லர் 4, அஸ்மதுல்லா உமர்சாய் 13 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்பியது

ராகுல் தெவாட்டியா பினிஷ்

இந்த சீசனில் இதுவரை சொல்லிக்கொள்ளும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமலும், அதற்கான வாய்ப்பும் இல்லாமலும் இருந்து வந்த தெவாட்டியா, இந்த போட்டியில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி வெற்றியை பெற்று தந்தார்.

முக்கிய விக்கெட்டுகளை இழந்து குஜராத் டைட்டன்ஸ் தடுமாறி கொண்டிருந்தபோது பேட் செய்ய வந்த தெவாட்டியா அதிரடியாக பேட் செய்தார். கிடைத்து எளிய வாய்ப்புகளை பவுண்டரிகளாக மாற்றியதோடு கடைசி வரை நின்று அணித்து வெற்றியை தேடி தந்தார். தெவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்த தெவாட்டியா 7 பவுண்டரிகளை அடித்தார்.

ஸ்பின் ராஜ்ஜியம்

முல்லான்பூர் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்களே சாதித்து வந்தனர். ஆனால் இந்த போட்டியில் ஸ்பின்னர்கள் ஜொலித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் ஸ்பின்னர் சாய் கிஷோர் 4, நூர் அகமது 2=, ரஷித் கான் 1 மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் லியாம் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளை அந்தந்த அணிகளுக்கு திருப்புமுனையாக அமைந்தது.

ப்ளேஆஃப் வாய்ப்பு இழக்கும் நிலையில் பஞ்சாப்

விளையாடி 8 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வென்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point