Pakistan Team: அணிக்குள்ளே மூன்று கருப்பு ஆடுகள்! குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான் - புட்டு வைத்த வாரிய புள்ளிகள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pakistan Team: அணிக்குள்ளே மூன்று கருப்பு ஆடுகள்! குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான் - புட்டு வைத்த வாரிய புள்ளிகள்

Pakistan Team: அணிக்குள்ளே மூன்று கருப்பு ஆடுகள்! குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான் - புட்டு வைத்த வாரிய புள்ளிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 15, 2024 02:58 PM IST

அணிக்குள்ளே மூன்று பேர் கருப்பு ஆடுகள் போல் மூன்று குழுக்கள் பிரிந்து கிடக்கின்றனர். குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான் அணி என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய புள்ளிகளை பல தகவல்கள் புட்டு வைத்துள்ளனர்.

குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான், புட்டு வைத்த வாரிய புள்ளிகள்
குரூப்பிசத்தால் அழிந்து போன பாகிஸ்தான், புட்டு வைத்த வாரிய புள்ளிகள்

அணிக்கு நிலவும் குரூப்பிசம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களின்படி, பாபர் அசாம் கேப்டனாக மீண்டும் வருவதில் மிகப்பெரிய சவாலான விஷயமாக அணியை ஒன்றிணைக்கும் விஷயம் உள்ளது. ஆனால் தற்போது நிலவி வரும் குரூப்பிசம் காரணமாக அவரால் அவ்வாறு செய்ய முடியாத எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கேப்டன் பதவியை இழந்ததாலும், தேவைப்படும்போது பாபர் ஆதரவு அளிக்காததாலும் வேகப்பந்து பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வருத்தமடைந்தாராம். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தன்னை கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாததில் அதிருப்தி அடைந்தாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்குள் மூன்று குரூப்புகள்

"பாகிஸ்தான் அணியில் மூன்று குழுக்கள் உள்ளன, ஒன்று பாபர் அசாம், இரண்டாவது ஷாகின் மற்றும் மூன்றாவது முகமது ரிஸ்வான். முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் போன்ற மூத்த வீரர்களின் வருகையை டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியே பேரழிவுக்கு காரணமாக இருந்தது" என்று அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி பார்த்தால் கேப்டன் பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான் ஆகியோர் கருப்பு ஆடுகள் போல் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தொடர்ந்து, "இமாத் மற்றும் அமீர் திரும்புவது அணியில் குழப்பத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பாபர் அசாம், அவர்கள் இருவரிடமிருந்தும் எந்தவொரு பயனுள்ள செயல்திறனையும் பெறுவது கடினம். நீண்ட காலமாக பிரான்சைஸ் டி20 லீக்குகளைத் தவிர உயர்மட்ட உள்நாட்டு அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

சில வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசாத சம்பவங்கள் கூட இருந்தன. அவர்களில் சிலர் அணியில் உள்ள அனைத்து குழுத் தலைவர்களையும் சமாதானப்படுத்த முயன்றனர்" எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிசிபி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "உலகக் கோப்பைக்கு முன்பே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி அணியில் உள்ள பிரச்னைகளை நன்கு அறிந்திருந்தார். இதனை அணியின் தேசிய தேர்வாளர் மற்றும் மூத்த மேலாளர் வஹாப் ரியாஸ் அவரிடம் விளக்கியுள்ளார்.

இதன் பின்னர் நக்வி அனைத்து வீரர்களுடனும் தனிப்பட்ட முறையில் இரண்டு சந்திப்புகளை நடத்தினார். மேலும் அவர்களின் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

நான் பாபரை பாதுகாக்கவில்லை. ஆனால் உங்கள் முதன்மை பந்துவீச்சாளர் பலவீனமான அமெரிக்க அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 15 ரன்களைக் கூட பாதுகாக்க முடியாமல், ஃபுல் டாஸில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை விட்டுக்கொடுக்கும்போது ஒரு கேப்டன் என்ன செய்ய வேண்டும்.

டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவுவார் என்ற நம்பிக்கையில் ஓய்விலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு ஆல்ரவுண்டர் உடற்தகுதி பிரச்சினைகளுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்.

வீரர்களின் முகவர்கள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்திய சில முன்னாள் வீரர்கள் உட்பட வெளிப்புற சக்திகளின் பங்கும் அணிக்கு நிலவிய கொதிக்கும் பதட்டங்களைத் தணிக்க உதவவில்லை.

நக்வி இப்போது தேசிய அணியில் மாற்றங்களைச் செய்வதை சுட்டிக்காட்டியுள்ளார், ஆனால் கிரிக்கெட் வாரியத்திலும் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் சில தகவல்கள் தெளிவுபடுத்துகிறது.

எனவே வாரிய தலைவர் வெளிப்படையாக அணியில் உள்ள விஷயங்களை சுத்தம் செய்ய இருக்கிறார். ஏற்கனவே குழுவில் உள்ள மூத்த மற்றும் நடுத்தர நிலை ஊழியர்களின் செயல்திறன் தொடர்பான மதிப்பீடுகளின் செயல்முறையைத் தொடங்கியுள்ளார்.

அதன்படி விரைவில் குழுவில் மற்றும் நிர்வாக மட்டத்தில் பெரிய மாற்றங்களைக் காண்பீர்கள்," என்றார்.

டி20 தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, யுஎஸ்ஏ, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பிடித்திருந்தது பாகிஸ்தான் அணி. இந்த தொடரில் தனது முதல் போட்டியில் கத்துக்குட்டி அணியான யுஎஸ்ஏ அணிக்கு எதிராக முதல் முறையாக மோதிய டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது.

இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் குறைவான ஸ்கோரை கூட சேஸ் செய்ய முடியாமல் 6 ரன்களில் தோல்வியை தழுவியது.

பின்னர் மூன்றாவது போட்டியில் கனடா அணிக்கு எதிராக வெற்றியை பெற்றபோதிலும், கடைசி போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக மிகப் பெரிய வெற்றி, யுஎஸ்ஏ தனது அடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்தால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் யுஎஸ்ஏ - அயர்லாந்து மோத இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் யுஎஸ்ஏ அணி பாகிஸ்தானை விட ஒரு புள்ளி அதிகம் பெற்றது. இனி எஞ்சியிருக்கும் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் யுஎஸ்ஏ பெற்றிருக்கும் புள்ளிகளை முந்த முடியாது என்பதால் டி20 உலகக் கோப்பை 2024 தொடரை விட்டு வெளியேறியது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடரில் இதே போல் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அடுத்து கம்பேக் கொடுத்து இறுதிப்போட்டி வரை சென்றது பாகிஸ்தான். ஆனால் இந்த முறை பரிதாபமாக வெளியேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.