சதத்தை கோட்டை விட்ட கில்..முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் ஜடேஜா
சதத்தை கோட்டை விட்ட போதிலும் தனது அற்புத இன்னிங்ஸால் இந்தியாவுக்கு முன்னிலை பெற்று தந்தார் கில். இரண்டாவது இன்னிங்ஸிலும் பவுலிங்கில் மிரட்டினார் ஜடேஜா.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியிருக்கும் நியூசிலாந்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 235 ஆல்அவுட்டாகி நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் தொடர்ந்து 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய பவுலர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய இன்னிங்ஸில் கில் 31, பண்ட் 1 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
சதத்தை மிஸ் செய்த கில்
இன்று இரண்டாம் நாள் தொடர்ந்த இந்தியாவுக்கு கில் - பண்ட் ஜோடி நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 96 ரன்கள் சேர்த்தனர். இதில் பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் சிறப்பாக பேட் செய்து அரைசதத்தை பூர்த்தி செய்த கில் 90 ரன்கள் அடித்து அவுட்டாகி, சதத்தை கோட்டை விட்டார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் கொஞ்சம் அதிரடியாக பேட் செய்து 38 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அத்துடன் நியூசிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலை பெற்றது. நியூசிலாந்து பவுலர்களில் இடது கை ஸ்பின்னர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றம்
இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீச்சில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார். முதல் இன்னிங்ஸில் துல்லியம் காட்டிய ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து.
அத்துடன் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை வீழ்த்தாத அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. தற்போதைய நிலையில் நியூசிலாந்து 143 ரன்கள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா 4, அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
டாபிக்ஸ்