தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ipl Prize Money: ஐபிஎல் சாம்பியனுக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா? ஆரஞ்சு, பர்பிள் தொப்பி வெற்றியாளர்கள் - முழு விவரம்

IPL Prize Money: ஐபிஎல் சாம்பியனுக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா? ஆரஞ்சு, பர்பிள் தொப்பி வெற்றியாளர்கள் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 26, 2024 08:28 PM IST

ஐபிஎல் 2024 தொடர் இன்று முடிவுக்கு வர இருக்கும் நிலையில், வெற்றியாளர் முதல் டாப் 4 அணிகள் எவ்வளவு பரிசு தொகை பெற போகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதேபோல் ஆரஞ்சு மற்றும் பர்பிள் தொப்பி வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகையும் தெரிந்து கொள்ளலாம்.

ஐபிஎல் சாம்பியனுக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா
ஐபிஎல் சாம்பியனுக்கு எவ்வளவு பரிசு தொகை தெரியுமா

ட்ரெண்டிங் செய்திகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை 2 முறையும், சன் ரைசர்ஸ் அணி ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையும் வென்றுள்ளது. இந்த சீசனில் இரண்டு முறை இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இரண்டு முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் சாம்பியனுக்கு எவ்வளவு பரிசுதொகை

ஐபிஎல் 2024 தொடரில் மொத்தம் ரூ. 46.5 கோடிக்கு பரிசுதொகை அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுதொகை வழங்கப்படவுள்ளது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி ரூ. 13 கோடி பரிசுதொகை பெறும்.

இதேபோல் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிக்கு முறையே ரூ. 7 கோடி மற்றும் ரூ. 6.5 கோடி பரிசுதொகை வழங்கப்படும்.

சிறந்த வீரர்களுக்கான பரிசுதொகை

அதிக ரன்களை அடிக்கும் பேட்ஸ்மேனுக்கு ஆரஞ்சு தொப்பி பரிசாக வழங்கப்படுவதுடன், ரூ. 15 லட்சம் தொகையும் வழங்கப்படும். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்களுக்கு பர்பிள் தொப்பியும், ரூ. 15 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும்.

இந்த சீசனில் 15 போட்டிகளில் 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி உள்ளார். எனவே அவர்தான் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். ஒரு சதம், 5 அரைசதங்களை அடித்துள்ளார்.

பவுலிங்கை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பவுலிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 19.87 சராசரி, 9.73 எகானமியும் கொண்டுள்ளார்.

எமெர்ஜிங் பிளேயர் எனப்படும் வளர்ந்து வரும் வீரர்,மோஸ்ட் வேல்யபிள் பிளேயர் எனப்படும் மிகவும் மதிப்புமிக்க வீரருக்கான பரிசுதொகை முறையே ரூ. 20 லட்சம் மற்றும் ரூ. 12 லட்சம் ஆகும்.

மற்ற டி20 லீக்குகளில் பரிசு தொகை எவ்வளவு

ஐபிஎல் போல் உலகின் மற்ற நாடுகளிலும் டி20 லீக்குகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் டி20 தொடரில், 2024 சீசனில் வெற்றியாளருக்கு ரூ. 4.13 கோடி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கும் ரூ. 1.65 கோடி வழங்கப்படுகிறது

வங்கதேச ப்ரீமியர் லீக்கான பிபிஎல் தொடரில் கடந்த 2023 சீசனில் வெற்றியாளருக்கு ரூ. 1.4 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

ஐபிஎல் போல் உலக அளவில் பிரபலமாக இருந்து வரும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக், பிபிஎல் தொடரில் 2023-24 சீசனில் வெற்றியாளருக்கு ரூ. 3.7 கோடியும், இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 2.15 கோடியும் அளிக்கப்பட்டது.

தென்ஆப்பரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக்கில் வெற்றியாளருக்கு ரூ. 15 கோடி, இரண்டாவது இடத்தை பிடித்த அணிக்கு ரூ. 7.2 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024