HT Cricket Special: 99 நாட் அவுட், 99 அவுட்! Nervous ninetiesஇல் சச்சினுக்கு முன்னோடியாக திகழ்ந்த ரிச்சி ரிச்சர்ட்சன்
சச்சின் வருகைக்கு முன்னர் 90 ரன்களுக்கு மேல் எடுத்து அதிக முறை அவுட்டான பேட்ஸ்மேனாக இருந்தவர் ரிச்சி ரிச்சர்ட்சன். ஆனாலும் இவர் அட்டகாச பேட்ஸ்மேனாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் நாயகனாகவும் வர்ணிக்கப்பட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ரிச்சி ரிச்சர்ட்சன்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 1983 முதல் 1996 வரை 15 ஆண்டு காலம் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தவர் ரிச்சி ரிச்சடர்ட்சன். அட்டகாச பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்பட்ட இவர், வேகப்பந்து வீச்சாளர்களை எந்த பயமும் இன்றி எதிர்கொண்டு ரன் குவிப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
உலகமே விவன் ரிச்சர்ட்ஸை பற்றி பேசி புகழ்ந்து கொண்டிருக்கையில் சைலண்டாக சாதித்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிச்சர்ட்சன். எதிரணியினர் ரிச்சர்ட்ஸ்க்கு ஸ்கெட்ச் போட்டு இவரை தவிர்க்க, அதை சாதமாக்கி பவுலர்களை தவிடுபொடியாக்கும் வீரராக இருந்துள்ளார்.
டெஸ்ட், ஒரு நாள் என இருவகை போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்தபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸ் நாயகனாக வலம் வந்தார் ரிச்சர்ட்சன்.