HBD Ashish Nehra: 140 கிமீ வேகத்தில் பந்து வீசும் புயலாக இருந்தவர்! இந்திய அணியின் மேட்ச் வின்னர் ஆஷிஷ் நெக்ரா பர்த்டே
இந்திய அணியில் இடம்பிடித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம், துல்லியம், லைன் மற்றும் லென்தில் வேரிஷன் காட்டுவது என தந்திரம் மிக்க பவுலராக இருந்து வந்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா. இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முக்கிய பவுலராகவும் இருந்ததோடு, பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடிய ஸ்டிரைக் பவுலராக இருப்பவர்க ஆஷிஷ் நெக்ரா. மேட்ச் வின் பவுலராக இருந்து வந்த இவர் 2002இல் இந்தியா வென்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியிலும், 2011இல் இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
சேவாக்குடன ரஞ்சி போட்டியில் ஆட்டம்
ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெக்ரா, இந்திய அணியின் முன்னாள் ஓபனர் வீரேந்தர் சேவாக்குடன் இணைந்து விளையாடியுள்ளார். இவரும் சேவாக்கும், ஒரே பைக்கில் சென்று டெல்லியில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.
டெஸ்டில் அறிமுகம்
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட நெக்ராவுக்கு 1999இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காகக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது 18 ஆண்டுகள் கிரிக்கெட் கேரியரில் மொத்தம் 5 ஆண்டுகள் தான் நெக்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக அவர் 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.