HBD Inzamam-ul-Haq: 20 ஆயிரம் சர்வதேச ரன்கள் அடித்த ஒரே பாகிஸ்தான் பேட்ஸ்மேன்! மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்
அதிரடியான பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் பாகிஸ்தான் அணியின் டாப் ரன் ஸ்கோரராகவும், சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் இன்சாமம்-இல்-ஹக்

பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 1991 முதல் 2007 வரை விளையாடியவர் இன்சமாம்-உல்-ஹக். இந்தியாவின் சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட் போல், பாகிஸ்தான் அணிக்காக ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய 90ஸ் தலைமுறை வீரராக உள்ளார்.
முதன் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர், தனது மிரட்டல் அடி பேட்டிங்கால் 1992 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் தேர்வானார். அந்த தொடரிலும் தனது அதிரடியான பேட்டிங்கால் டேஞ்சர் பேட்ஸ்மேன் என பெயரெடுத்தார்.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பை பெற்ற இன்சமாம், அணியில் நிலையான இடத்தை பிடித்த பின்னர் தனது ஆட்டத்திறனை மாற்றினார். டிபென்ஸ், அதிரடி என கலந்துகட்டி விளையாடி கன்சிஸ்டன்ட் ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தினர். அவ்வளவு சீக்கரம் பவுலர்களின் வலையில் சிக்காமல், அவர்களை நாக்கு தள்ள வைக்கும் பேட்ஸ்மேனாக உருமாறினார்.