HBD Parthiv Patel: இந்திய கிரிக்கெட்டில் Proxy போல் செயல்பட்ட வீரர்! கைவிரல் இழந்தபோதிலும் தன்னம்பிக்கை இழக்காதவர்
சிறுவயதில் கைவிரல் ஒன்றை இழந்தபோதிலும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் இளம் டெஸ்ட் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி, 16 ஆண்டு காலம் வரை Proxy போல் அணிக்கு வருவதும் போவதுமாக இருந்துள்ளார் பார்தீவ் பட்டேல்.

இந்திய டெஸ்ட் அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றவர் பார்தீவ் பட்டேல். கங்குலி கேப்டன்சி பொறுப்பேற்ற பின்னர் அவர் சிறந்த அணியை கட்டமைப்பதற்காக கண்டறிந்து உருவாக்கிய வீர்ரகளில் ஒருவராக திகழ்ந்தவர் பார்தீவ் பட்டேல்.
இடது கை பேட்ஸ்மேனான இவர் இந்தியாவுக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் இதில் விநோதமான விஷயம் என்னவென்றால் 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் கேரியரை கொண்டிருக்கும் இவர், மூன்று வகை கிரிக்கெட்டையும் சேர்த்து மொத்தம் 65 சர்வதேச போட்டிகளில் தான் விளையாடியுள்ளார்.
சிறுவயதில் கைவிரல் ஒன்றை இழந்தபோதிலும் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடி வந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் ஈரத்தார்.