Sanjay Hazare: கிரிக்கெட் குடும்பத்தில் பிறந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ஜொலித்த சஞ்சய் ஹசாரே
கிரிக்கெட் குடும்பத்தில் இருந்து பிறந்த வந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த வீரராக இருந்து வந்த சஞ்சய ஹசாரே, இந்தியா அணிக்காக விளையாடாமல் போனது துர்தஷ்டவசமான விஷயமாகவே அமைந்தது.
இந்தியா உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின் பவுலராக ஜொலித்தவர் சஞ்சய் ஹசாரே. இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் வெற்றியை பெற்று தந்த கேப்டனான விஜய் ஹசாரேவின் உறவினரான இவர் 1981 முதல் 1998 காலகட்டம் வரை இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார்.
லெக் ஸ்பின் பவுலரான சஞ்சய் ஹசாரே கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒருவராக திகழ்ந்தார். வதோத்ரா அணிக்காக விளையாடிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெறாமல் போனது துர்தஷ்டவசமான விஷயமாகவே அமைந்தது.
48 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்கும் சஞ்சய் ஹசாரே 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு முறஐ 10 விக்கெட் ஆட்டமும், 8 முறை 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார். சிறந்த லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் இருந்து வந்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அம்பயராக கேரியரை தொடர்ந்த சஞ்சய் ஹசாரே ஒரு நாள், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார்.
கிரிக்கெட் குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட் விளையாட்டில் பல வகைகளில் தன்னை ஈடுபடுத்தி வருபவராக இருந்து வரும் சஞ்சய் ஹசாரேவுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்