HT Cricket Special: பீல்டிங் சவாலில் ஜாண்டி ரோட்ஸை வீழ்த்திய வீரர்! பவுலிங் ஆல்ரவுண்டராக ஜொலித்த நோயல் டேவிட்
விளையாடியது நான்கு சர்வதேச போட்டிகள் என்றாலும் அற்புத பீல்டிங்கால் ஆச்சர்யத்தை வரவழைத்தவராக இருந்தார் நோயல் டேவிட்.
இந்திய கிரிக்கெட் அணியில் 1990 காலகட்டத்தில் வெறும் நான்கு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி, அதன் பின்னர் வாய்ப்பை கிடைக்காமலேயே ஓரங்கட்டப்பட்ட வீரர் நோயல் டேவிட். பவுலிங் ஆல்ரவுண்டரான இவர் ஆஃப் ஸ்பின் பவுலிங்கிலும், லோயர் ஆர்டரில் ரன்களை அடிக்கூடிய பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட நோயல் டேவிட் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்தது. அதன் பின்னர் அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த டேவிட் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக ஜொலித்த நோயல் டேவிவ், ரஞ்சி கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச அணி ஸ்கோராக ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் எடுத்து 944 ரன்கள் இரட்டை சதமடித்த பேட்ஸ்மேனாக இவர் உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் காயம் காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில், மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொரில் சேர்க்கப்பட்டார் நோயல் டேவிட். முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டை இவர் வீழ்த்தினார்.
பவுலிங், பேட்டிங்கை காட்டிலும் அற்புதமான பீல்டிங்கால் கவனத்தை ஈர்த்த இவர் இந்தியாவின் ஜாண்டி ரோட்ஸ் என்றே அழைக்கப்பட்டார்.
1996 உலகக் கோப்பை தொடரின்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக தென் ஆப்பரிக்கா விளையாடிய போட்டியில் ஜாண்டி ரோட்ஸ்க்கு எதிராக பீல்டிங் சேலஞ் வைத்து அதில் வெற்றியும் கண்டார் நோயல் டேவிட்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்தபடியாக ஆசிய கோப்பை தொடரில் சேர்க்கப்பட்டார் டேவிட். அந்த தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடி பின் இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
அதன் பிறகு அவருக்கான வாய்ப்பு என்பது கிடைக்காமலேயே போனது. தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் விளையாடி வந்த நோயல் டேவிட் ஓய்வுக்கு பின்னர் ஹைதராபாத் அணி பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.
புதுச்சேரியை பூர்வீகமாக கொண்டு இந்திய அணியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்ற நோயல் டேவிட், 90ஸ்களில் கவனத்தை ஈர்த்தவராக திகழ்ந்தார். சிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராக ஜொலிக்க வேண்டியவராக இருந்து, வாய்ப்பு இல்லாமல் காணாமல் போன வீரராக திகழ்ந்த நோயல் டேவிட்டுக்கு இன்று பிறந்தநாள்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்