Shane Warne: கிரிக்கெட் விளையாட்டில் தவிர்க்க முடியாத நபர்! டாப் பேட்ஸ்மேன்களின் தூக்கத்தை கலைத்த ஷேன் வார்னே
சர்வதேச கிரிக்கெட் மட்டுமல்லாது, ஐபிஎல் போன்ற டி20 லீக்குகளிலும் தனது வியத்தகு சுழற்பந்துவீச்சின் மூலம் மகத்தான பல சாதனைகள படைத்தவர் ஷேன் வார்னே.

இந்திய கிரிக்கெட் என்றால் சச்சின் டென்டுல்கர் என்ற பெயர் சிறுவயது குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை தெரிந்திருப்பது போல், ஆஸ்திரேலியா கிரிக்கெட் என்றாலே நினைவுக்கும் வரும் பெயராக சுழல் ஜாம்பவான் ஷேhttps://images.hindustantimes.com/tamil/img/2024/03/03/960x540/shan_warne_1709493772078_1709493784851.jpg?1709493802522ன் வார்னே உள்ளார்.1992 முதல் 2007 வரை 15 ஆண்டுகள் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மாஸ்டராக ஜொலித்துள்ளார்.
முதல் முறையாக ஒரு பவுலர் 600 விக்கெட்டுகள் என்ற மேஜிக் எண்களை அடைந்து உலகையை திரும்பி பார்க்க வைத்தது என்றால் அது ஷேன் வார்னே தான். ஆஸ்திரேலிய - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போர் என்றே கருதப்படும் புகழ் பெற்ற ஆஷஷ் டெஸ்ட் தொடரில், வீசிய முதல் பந்திலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன் மைக் கேட்டிங் விக்கெட்டை வீழ்த்தி கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனியொரு கவனத்தை பெற்றார்.
உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரலேயாவின் ஆதிக்கம் 1999 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் தொடங்கியது. அதற்கான விதையை போட்ட வீரர்களில் ஒருவராக இருந்தர் வார்னே. எப்படி பந்து வீசினாலும் அடிக்ககூடிய பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சூழலால் கட்டுப்படுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பவுலராக வாரனே தனது கேரியரில் 1001 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.