HT Cricket Special: சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு! மிஸ்டர் கிரிக்கெட் - லேட் என்ட்ரிக்கு பின் வான்டட் வீரரான மைக் ஹஸ்ஸி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ht Cricket Special: சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு! மிஸ்டர் கிரிக்கெட் - லேட் என்ட்ரிக்கு பின் வான்டட் வீரரான மைக் ஹஸ்ஸி

HT Cricket Special: சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு! மிஸ்டர் கிரிக்கெட் - லேட் என்ட்ரிக்கு பின் வான்டட் வீரரான மைக் ஹஸ்ஸி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 27, 2024 06:00 AM IST

மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் மைக் ஹஸ்ஸி சிஎஸ்கே அணியின் முதுகு எலும்புகளில் ஒருவராக உள்ளார். ஆஸ்திரேலியா அணியில் லேட்டாக என்ட்ரி கொடுத்து அணியின் மோஸ்ட் வான்டட் வீரராக திகழந்தவராக ஹஸ்ஸி இருந்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு மைக் ஹஸ்ஸி பிறந்தநாள்
சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு மைக் ஹஸ்ஸி பிறந்தநாள்

2006 சாம்பியன்ஸ் டிராபி, 2007 உலகக் கோப்பை, 2009 சாம்பியன்ஸ் டிராபி வென்ற ஆஸ்திரேலியா அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்துள்ளார்.

இடது கை பேட்ஸ்மேனான இவர், ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப நிதானமும், அதிரடியும் கலந்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். அதேபோல் மித வேக பந்து வீச்சாளரான ஹஸ்ஸி சிறந்த பீல்டராக அணிக்கு முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். பேட்டிங்கில் ரன்கள் குவிப்பது போல் பீல்டிங்கில் எதிரணிக்கு சுமார் 10 முதல் 20 ரன்கள் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தும் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹஸ்ஸி ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்டில் 19, ஒரு நாள் போட்டியில் 3 என மொத்தம் 22 சதங்கள் அடித்துள்ளார்.

மிஸ்டர் கிரிக்கெட்

மைக் ஹஸ்ஸியை மிஸ்டர் கிரிக்கெட் என்ற பெயரில் அழைப்பதுண்டு. ஒரு பக்காவான கிரிக்கெட் வீரராக அனைத்து விதமான பங்களிப்பையும் அணிக்கு தருவதால் அவரை இவ்வாறு அழைத்தனர். ஆனால் இந்த பெயர் தனக்கு பொருத்தமாக இல்லை எனவும், கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்வதாகவும் தெரிவித்தார்.

மைக்கேல் ஹஸ்ஸியின் சகோதரரான டேவிட் ஹஸ்ஸியும் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார். மார்க் வாக் - ஸ்டீவ் வாக்,  ஷான் லீ - பிரிட் லீ ஆகியோரை போல் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய சகோதரர்களாக இவர்கள் இருந்தார்கள். 

சிஎஸ்கே அணியின் முதுகு எலும்பு

ஐபிஎல் முதல் சீசனான 2008இல் இருந்து 2013 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ஹஸ்ஸி, 2011 சீசனில் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். சிஎஸ்கேவுக்காக முதல் சதம் அடித்த பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி தான்.

2014 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹஸ்ஸி, பின்னர் 2015இல் மீண்டும் சிஎஸ்கே அணியில் விளையாடினார். அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற பின்னர் தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். சொல்லப்போனால் சிஎஸ்கே முதுகு எலும்புகளில் ஒருவராக ஹஸ்ஸி இருந்து வருகிறார்.

ஹஸ்ஸி சாதனைகள்

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி 12 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஹஸ்ஸி உள்ளார். 88 போட்டிகள் வரை டக் அவுட்டாக விளையாடிவர் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஹஸ்ஸி அதிக பார்ட்னர்ஷிப், அதிவேக ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரன்கள் வரை என பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார்.

மிகவும் வயதானவராக அணியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பை தந்து தாக்கம் ஏற்படுத்திய வீரராக இருந்து வந்த மைக்கேல் ஹஸ்ஸிக்கு இன்று பிறந்தநாள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.