HT Cricket Special:டெஸ்ட்டில் 100 ரன்கள், 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர்! கைவிரல் உடைந்தும் போட்டியை சமன் ஆக்கியவர்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 ரன்கள், 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை புரிந்ததோடு, டெஸ்டில் முதல் முறையாக சமன் ஆன போட்டியில் இடம்பிடித்த இவர், கைவிரல் உடைந்தும் அணிக்கான பங்களிப்பை பேட்டிங், பவுலிங்கில் வழங்கியவராக உள்ளார்.
ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆலன் டேவிட்சன். இடது கை வேகப்பந்து வீச்சாளாராகவும், இடது கை லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடி தந்த வீரராக இருந்துள்ளார்.
ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர்
சுமார் ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இருக்கும் ஆலன் டேவிட்சன், அந்த காலகட்டத்தில் பவுண்டரியை கடந்து நீண்ட தூரம் சிக்ஸர் அடிக்கும் பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார். அத்துடன் சிறந்த பீல்டராகவும் இருந்த இவர், க்ளோஸ் பொஷிசன்களில் கேட்ச்களை பிடிப்பதில் கில்லியாக இருந்துள்ளார். இதனால் இவர் கிளாவ் என்ற பட்டப்பெயராலும் அழைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா அணிக்காக 1953 முதல் 1963 வரை 10 ஆண்டுகள் விளையாடி இவர், பல போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார்.
ஸ்பின் பவுலிங் டூ வேகப்பந்து வீச்சாளர்
உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியபோது இடது கை அன்அர்த்தோடாக்ஸ் ஸ்பின் பவுலராக இருந்தார் ஆலன் டேவிட்சன். அவரது அங்கிள் அணியில் விளையாடியபோது வேகப்பந்து வீச்சாளராக இல்லாதபோது டேவிட்சன் வேகப்பந்து வீச்சளாராக செயல்ப்பட்டோர்.
அப்போது முதல் அவர் வேகப்பந்து வீச்சாளராக உருமாறி, தனது கிரிக்கெட் கேரியர் முடிவு வரை அவ்வாறே செயல்பட்டார். டீன் ஏஜ் வயதில் ரக்பி விளையாட்டு வீரராகவும் இவர் இருந்துள்ளார்.
சமனில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சமனில் முடிந்த போட்டி 1960ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேன் நடைபெற்றது. இந்த போட்டி சமனில் முடிவதற்கு முக்கிய பங்களிப்பை அளித்தவராக ஆலன் டேவிட்சன் இருந்தார்.
இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என மகத்தான பங்களிப்பை தந்த அவர் முதல் இன்னிங்ஸில் 44, இரண்டாவது இன்னிங்ஸில் 80 ரன்கள் எடுத்தார்.
அதேபோல் பவுலிங்கில் முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கைவிரல் உடைந்த நிலையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அணி தோல்வியின் பிடியில் தப்பிக்க வைக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
தனித்துவ சாதனை
தனது சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 44 போட்டிகளில் விளையாடியிருக்கும் டேவிட்சன், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளார். இதில் தனது சிறந்த பவுலிங்கை இந்தியாவுக்கு எதிராக படைத்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 100 ரன்கள், 10 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். குறைவான போட்டிகளில் டக் அவுட், முதல் டக் அவுட் ஆவதற்கு முன்னர் அதிக இன்னிங்ஸ் விளையாடியது போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஆலன் டேவிட்சன் பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்