WPL 2024 auction: 'இந்த வீராங்கனைகளுக்கு ஏலத்தில் அதிக போட்டி இருக்கும்'-முன்னாள் கிரிக்கெட் வீரர் கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இன்று நடைபெறவுள்ள WPL 2024 ஏலத்திற்கான கணிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டீன்ட்ரா டோட்டின் ஆகியோரை ஏலத்தில் எடுக்க இன்றைய ஏலத்தில் போட்டி இருக்கும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் (WPL 2024) ஏலம், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மொத்தம் 165 கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்கள் ஏலத்தின் இடம்பெறுகிறது, அவர்களில் 104 வீராங்கனைகள் இந்தியர்கள் மற்றும் 61 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், இதில் 15 பேர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
டியான்ட்ரா டோட்டின் மற்றும் கிம் கார்த் ஆகியோர் அதிக அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்தைக் கொண்டுள்ளனர். இதற்கிடையில், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வீர்ஹாம், எமி ஜோன்ஸ் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் ரூ. 40 லட்சம் விலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, வரவிருக்கும் ஏலத்தை ஆராய்ந்து, இரண்டு வீராங்கனைகளுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் என கணித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் இலங்கை கிரிக்கெட் வீராங்கனை சாமரி அதபத்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டீன்ட்ரா டோட்டின் ஆகியோரை தேர்வு செய்திருWPL 2024 auctionக்கிறேன். இருவரும் பல பரிமாணங்களைக் கொண்ட திறமையான வீராங்கனைகள் என்பதால் அவர்களை ஏலத்தில் எடுக்க அணிகள் மல்லுக்கட்டும் "என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஏலத்தில் இலங்கை கேப்டன் அதபத்து தேர்வு செய்யப்படவில்லை, இது ஏராளமான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கிடையில், டாட்டினின் ஏலம் ரூ.50 லட்சத்தில் தொடங்கியதை அடுத்து, ரூ.60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸால் எடுக்கப்பட்டார். ஆனால் சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளால் வெளியேற்றப்பட்ட பிறகு அவர் முழு சீசனையும் தவறவிட்டார்.
டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய அணிகள் மகளிர் கிரிக்கெட் லீக்கில் விளையாடவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்