INDW vs ENGW: ஏமாற்றிய மந்தனா! பவுலிங், பேட்டிங்கில் சொதப்பல் - இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இந்தியா தோல்வி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indw Vs Engw: ஏமாற்றிய மந்தனா! பவுலிங், பேட்டிங்கில் சொதப்பல் - இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இந்தியா தோல்வி

INDW vs ENGW: ஏமாற்றிய மந்தனா! பவுலிங், பேட்டிங்கில் சொதப்பல் - இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இந்தியா தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 06, 2023 11:09 PM IST

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கும் நிலையில் எஞ்சிய போட்டிகளில் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் இந்திய பேட்டர் ஷெபாலி வர்மா, இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து பவுலர்  சோஃபி எக்லெஸ்டோன்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் இந்திய பேட்டர் ஷெபாலி வர்மா, இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து பவுலர் சோஃபி எக்லெஸ்டோன்

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இரண்டு டாப் ஆர்டர் பேட்டர்களை தூக்கி நல்ல தொடக்கத்தை தந்தார் ரேணுகா சிங்.

அதன் பின்னர் மற்றொரு ஓபனிங் பேட்டரான டேனி வியாட், நான்காவது பேட்டராக களமிறங்கிய நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் இந்திய பவுலர்களின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விக்கெட் சரிவை தடுத்து அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தனர். அரைசதமடித்த வியாட் 47 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி வரை பேட் செய்து 50 ரன்களை கடந்த நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 53 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதிரடியான கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் பேட்டர் எமி ஜோன்ஸ் 9 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் ரேணுகா சிங் 3, ஷ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

198 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஓபனிங் பேட்டரான ஷெபாலி வர்மா சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்து 52 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஹர்மன் ப்ரீத் கெளர் 26, விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் 21 ரன்கள் எடுத்தனர்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் ஓபனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். இவருக்கு அடுத்தபடியாக ஜேமிமா ரோட்ரிக்ஸும் 4 ரன்னில் நடையை கட்டினார்.

இங்கிலாந்து பவுலர்களில் சோஃபி எக்லெஸ்டோன் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 77 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்ட உதவிய நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.