INDW vs ENGW: பவுலிங்கில் ஆதிக்கம், பேட்டிங்கில் தடுமாற்றம்!இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து மகளிர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Indw Vs Engw: பவுலிங்கில் ஆதிக்கம், பேட்டிங்கில் தடுமாற்றம்!இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து மகளிர்

INDW vs ENGW: பவுலிங்கில் ஆதிக்கம், பேட்டிங்கில் தடுமாற்றம்!இந்திய மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து மகளிர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 09, 2023 09:41 PM IST

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவிய இந்தியா மகளிர் அணி, டி20 தொடரை இழந்துள்ளது.

ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் இங்கிலாந்து பேட்டர் ஆலிஸ் கேப்சி
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் இங்கிலாந்து பேட்டர் ஆலிஸ் கேப்சி (AP)

ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியா இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமையில் களமிறங்கியது.

இதையடுத்து இங்கிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா 16.2 ஓவரில் 80 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய பேட்டர்களில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிதானமாக பேட் செய்து அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்மிரிதி மந்தனா 10 ரன்கள் எடுத்தார். இந்த இருவர் மட்டுமே இந்திய அணியில் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தனர்.

இங்கிலாந்து பவுலர்களில் சார்லி டீன், லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 81 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அதிரடியான தொடக்கத்தை தந்தது. இருப்பினும் விக்கெட்டுகளும் சரிந்ததது. 6 விக்கெட்டுகள் இழந்தபோதிலும், 11. 2 ஓவரில் 82 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்திய பவுலர்களில் ரேணுகா சிங், தீப்தி சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி தடுமாறியது.

ஆனால் குறைவான ரன்களே இலக்காக இருந்த நிலையில், அதை சேஸ் செய்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.