Eng vs Ind 2nd Test Day 3: இந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!
England vs India 2nd Test Day 3 live updates in Tamil: இன்னும் 332 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும். பென் டக்கெட் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்களை எடுத்தது. 78.3 ஓவர்களில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 399 ரன்கள் இலக்காக இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3வது நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நாள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராலி, ரெஹான் அகமது ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இன்னும் 332 ரன்கள் எடுத்தால் அந்த அணி வெற்றி பெறும். பென் டக்கெட் விக்கெட்டை அஸ்வின் எடுத்தார்.
முன்னதாக, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் பதிவு செய்த யஷஸ்வி இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களில் நடையைக் கட்டினார்.
கேப்டன் ரோகித் 13 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஜத் படிதார் 9 ரன்கள், அக்சர் படேல் 45 ரன்கள் விளாசினர். சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதம் பதிவு செய்தார். 11 மாதங்களுக்குப் பிறகு டெஸ்டில் சதம் விளாசி தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கில்.
அவரது இடம் டெஸ்ட் அணி பிளேயிங் லெவனில் கேள்விக்குறியாகியிருந்த சமயத்தில் அவரது சதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அவர் 104 ரன்கள் எடுத்திருந்தபோது ஷோயப் பஷிர் பந்துவீச்சில் ஃபோக்ஸிடம் கேட்ச் ஆனார்.
ரெஹான் அகமது 3 விக்கெட்டுகளை இங்கிலாந்துக்காக எடுத்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஷோயப் 1 விக்கெட்டையும் எடுத்தனர். அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
339 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்ட 3வது நாளே களம் புகுந்தது இங்கிலாந்து. நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் நகரில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
மொத்தம் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து அணி நமது நாட்டுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளது. ராஜ்கோட், ராஞ்சி, தர்மசாலா ஆகிய மைதானங்களில் அடுத்தடுத்த டெஸ்ட்கள் நடக்கவுள்ளன.
இதனிடையே, உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன், டெஸ்டில் தனது 30 வது சதத்தை பதிவு செய்தார், ரச்சின் ரவீந்திரா தனது முதல் சதத்தை அடித்தார், மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் நியூசிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. வில்லியம்சன் மற்றும் ரவீந்திரா ஆகியோர் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 219 ரன்கள் கூட்டணி அமைத்து அனுபவமற்ற தென்னாப்பிரிக்க பந்துவீச்சு வரிசைக்கு எதிராக நியூசிலாந்து அணியை 258/2 ரன்களுக்கு வழி நடத்தினர்.
நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்த போது வில்லியம்சன் - ரவீந்திரா ஜோடி இணைந்தது. இரண்டாவது பந்தில் டெவன் கான்வேயை ஆட்டமிழக்கச் செய்த ஷெபோ மொரேகி, டாம் லாதமின் உற்சாகமான தொடக்கத்தை 20 ரன்களில் டேன் பீட்டர்சன் தடுத்தார். வில்லியம்சன் தனது சதத்தின் மூலம் தலா 29 சதங்கள் அடித்த டான் பிராட்மேன் மற்றும் விராட் கோலி ஆகியோரின் ஜாம்பவான்களை முந்தினார்.
டாபிக்ஸ்