Eng vs Ind 4th Test Result: சவால்களை கடந்து சாதனை.. இங்கிலாந்தை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
India Won Test Series Against England: கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அரை சதம் விளாசி அசத்தினர்.
ராஞ்சியில் நடந்துவந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது டெஸ்டை வென்றது. அத்துடன், தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
திங்களன்று மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 118-3 என்று இருந்தது, வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி அந்த இலக்கை எட்டி ஜெயித்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது டீம் இந்தியா.
ரோகித் சர்மா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால், 37 ரன்களில் ஜோ ரூட்டின் பந்தில் அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கில் நிலைத்து நின்று விளையாடினார். ரஜத் படிதார் டக் அவுட்டான நிலையில், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் நடையைக் கட்டினார். துருவ் ஜுரெல்-கில் பார்ட்னர்ஷிப் சற்று நிலைத்து விளையாடியது.
கில், அரை சதம் விளாசி அசத்தினார். 61 ஓவர்களில் இந்தியா இலக்கை அடைந்து வெற்றி கண்டது. இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
முன்னதாக, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களில் ஆட்டமிழந்தது. ஜாக் கிராவ்லி மட்டுமே அரை சதம் விளாசினார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி 73 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரெல் 90 ரன்கள் விளாசினார்.
கடைசி டெஸ்ட் தர்மசாலாவில் மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்டை இங்கிலாந்து ஜெயிக்க, அடுத்த 3 டெஸ்ட்களிலும் இந்தியா வெற்றி கண்டது.
ஜுரெலுக்கு குவிந்த வாழ்த்து
முன்னதாக, ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச ஸ்டேடியம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டின் மூன்றாம் நாளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் துருவ் ஜுரெலுக்கு நட்சத்திர இந்திய வீரர்கள், ஜஸ்பிரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜுரல் 149 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து 60.4 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அணி 177/7 என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது குல்தீப் யாதவுடன் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
பும்ரா இன்ஸ்டாவில் ஜூரலின் போட்டோவை பகிர்ந்து, பாராட்டினார். சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜுரலை பாராட்டினார்.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர், ஜூரலின் ஆட்டத்தை பாராட்டினார், "துருவ் ஜூரலுக்கு முழு இந்தியாவும் பாராட்டுகிறது. விக்கெட்டுக்கு முன்னும் பின்னும் துருவின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது. இந்த இன்னிங்ஸின் முக்கியத்துவத்தையும், குல்தீப்புடனான பார்ட்னர்ஷிப்பையும் எத்தனை பாராட்டினாலும் தகும்' என்றார்.